சிர்க்கோனியம்(III) குளோரைடு
சிர்க்கோனியம்(III) குளோரைடு (Zirconium(III) chloride) என்பது ZrCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். கருநீல நிறத்துடன் காணப்படும் இச்சேர்மம் காற்றில் அதிக உணர்திறனுடன் வினைபுரிகிறது. தயாரிப்புசிர்க்கோனியம் நாற்குளோரைடை அலுமினியம் சேர்த்து குறைத்தல் வழியாக சிர்க்கோனியம்(III) குளோரைடு தயாரிக்கப்பட்டது. மாசு கலந்த இச்சேர்மத்தை ஓட்டோ ரஃப் மற்றும் வால்சுடீன் ஆகியோர் தயாரித்தனர்.[4] அடுத்து அலுமினியம் பயன்படுத்துவதால் உண்டாகும் மாசுக்கள் பிரச்சினை, ஒடுக்க வினைக்கு சிர்க்கோனியம் உலோகத்தைப் பயன்படுத்துவதால் நீக்கப்பட்டது.[5]
அலுமினியத்தை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் சேர்த்து ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்தினால், வினையில் தொடர்ச்சியாக குளோரோவலுமினேட்டுகள் உருவாகின்றன.உதாரணமாக[Zr(AlCl4)2(AlCl4)2] and Zr(AlCl4)3.[6] சிர்க்கோனியம் முக்குளோரைடு போன்ற மூவாலைடுகள் ஒப்பீட்டளவில் எளிதில் ஆவியாவதில்லை. இதனால் வாயுநிலை ஆக்சிசன் ஒடுக்கியைச் சேர்ப்பதால் இம்மாசுச் சீர்கேட்டை தவிர்க்கலாம். உதாரணமாக, சிர்க்கோனியம் முக்குளோரைடை சிர்க்கோனியம் நாற்குளோரைடுடன் ஐதரசன் வாயுவைச் சேர்ப்பதன் மூலம் ஒடுக்க வினையில் தயாரிக்க முடியும்.[7]
கட்டமைப்புசில சிர்க்கோனியம் ஆலைடுகள் (ZrCl3, ZrBr3, and ZrI3) HfI3 சேர்மத்தை ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளன. ஒரே மாதிரியான இடக்குழு (P63 / MCM) மற்றும் அலகில் 2 மூலக்கூறு அறுங்கோண அமைப்பையும் பெற்றுள்ளன. சிர்க்கோனியம் முக்குளோரைடின் காந்த ஏற்புத்திறன் ஒவ்வொரு Zr(III) மையத்தின் மீதும் இணையில்லா எலக்ட்ரான்களின் உலோக - உலோக இடைவினைகளை பரிந்துரைக்கிறது. ZrCl3 இன் காந்த திருப்புத் திறன் மதிப்பு (0.4 போர் மக்னட்டான்) உலோக ஆர்பிட்டால்களின் கணிசமான மேற்படிதலைக் குறிக்கிறது[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia