சிர்க்கோனியம் சிடீயரேட்டு
சிர்க்கோனியம் சிடீயரேட்டு (Zirconium stearate) C72H140ZrO8C என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1][2] சிர்க்கோனியமும் சிடீயரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிவதால் இந்த உப்பு உருவாகிறது. ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என சீசியம் சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[3][4] தயாரிப்புகொதிக்கும் சிடீயரிக் அமிலத்துடன் நீரிலுள்ள சோடியம் கார்பனேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்து பின்னர் சிர்க்கோனியம் ஆக்சி குளோரைடு கரைசலைச் சேர்த்தால் சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகும்.[5] சிர்க்கோனியம் நைட்ரேட்டுடன் சோடியம் ஒலியேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு கிடைக்கும்.[6] இயற்பியல் பண்புகள்வெண்மை நிறத் தூளாக சிர்க்கோனியம் சிடீயரேட்டு உருவாகிறது. பயன்கள்சிர்க்கோனியம் சிடீயரேட்டு நீர்ப்புகா பொருட்கள் மற்றும் பால்மம் நிலைப்படுத்திகளுக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[7] சமதளமாக்கும் முகவராகவும் சிர்க்கோனியம் சிடீயரேட்டு பயன்படுத்தப்படுகிறது.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia