சிர்க்கோனியம் நைட்ரைடு
சிர்க்கோனியம் நைட்ரைடு (Zirconium nitride) என்பது ZrN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்திற்கே உரிய பண்புகளால் இது பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. பண்புகள்இயற்பிய ஆவிப் படிவு முறையில் சிர்க்கோனியம் நைட்ரைடு மெல்லிய தங்க நிறத்தில் உலோகத் தங்கம் போலவே உருவாக்கப்படுகிறது. அறைவெப்பநிலையில் சிர்க்கோனியம் நைட்ரைடின் மின் தடைத்திறன் 12.0 µΩ•செ.மீ ஆகும். மேலும், மின் தடையின் வெப்பநிலைக் கெழு மதிப்பு 5.6•10−8 Ω•செ.மீ/கெல்வின், மீக்கடத்துத்திறன் இடைநிலை வெப்பம் 10.4 கெல்வின், தளர்வுநிலை அணிக்கோவை அளவுரு 0.4575 நானோமீட்டர் போன்றவையும் இதன் தனிச்சிறப்பு பண்புகளாகும். இவற்றைத் தவிர சிர்க்கோனியம் நைட்ரைடு ஒற்றைப் படிகத்தின் கடினத் தன்மை மதிப்பு 22.7±1.7 கிகாபாசுகல் என்றும், மீட்சிக் குணக மதிப்பு 450 கிகாபாசுகல் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது[3]. பயன்கள்தைட்டானியம் நைட்ரைடு போன்ற ஒரு கடினமான பீங்கான் பொருளாகவும், சிமெண்ட் போல வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிர்க்கோனியம் நைட்ரைடு கருதப்படுகிறது. இதனால் இச்சேர்மத்தை வெப்பந்தாங்கும் பொருட்களாகவும், பீங்கான் உலோகமாகவும், புடக் குவளைகளாகவும் பயன்படுத்துகிறார்கள். இயற்பிய ஆவிப் படிவுப் பூச்சுச் செயல்முறையில் இதைப்பயன்படுத்தும் போது பொதுவாக மருத்துவக் கருவிகளின் மீது பூசப் பயன்படுத்துகிறார்கள்[4]. தொழிற்சாலைகளில் குறிப்பாக துளையிடும் கருவிகளிலும், தானியங்கிப் பொறிகள் மற்றும் விண்வெளி பொறிகளிலும் சிர்க்கோனியம் நைட்ரைடைப் பயன்படுத்துகிறார்கள். இவற்றைத் தவிர அரிக்கும் சூழல்களில் உடுத்தும் பொருளாகவும் இது பயன்படுகிறது. ராக்கெட்டுகள் மற்றும் வானூர்திகளில் ஐதரசன் பெராக்சைடு எரிபொருள் கலத்தின் உள்ளக உறையாக சிர்க்கோனியம் நைட்ரைடைப் பயன்படுத்த பரிந்துரைக்கிறார்கள்[5]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia