சுங்கை பாக்காப்
சுங்கை பாக்காப் (ஆங்கிலம்: Sungai Bakap; மலாய்: Sungai Bakap; சீனம்: 双溪峇甲); என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தெற்கில் ஜாவி ஆறு (Sungai Jawi); வடக்கில் சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) நகரமும்; வால்டோர் கிராமமும் உள்ளன.[1] நிபோங் திபால் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் புக்கிட் மெர்தாஜாம். ஈப்போ, கோலாலம்பூர், பினாங்கு, அலோர் ஸ்டார் போன்ற மாநகரங்களில் இருந்து சுற்றுப் பயணிகள் இங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்வது வழக்கம். இங்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் அதிகமான அளவில் சுற்றுப் பயணிகள் இங்கு வருகிறார்கள். கிராமப் பகுதிகள்சுங்கை பாக்காப் நகர்ப் பகுதியில் சில கிராமங்கள் உள்ளன. அவற்றுள் வால்டோர் கிராமம் இந்த நகரத்திற்கு மிக முக்கியமான இடமாகும். இங்கு நிறைய உணவகங்கள் உள்ளன.
சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிகள்சுங்கை பாக்காப் நகர்ப்புறத்தில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 392 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia