செருமேனியம்(II) ஐதராக்சைடுசெருமேனியம்(II) ஐதராக்சைடு (Germanium(II) hydroxide) Ge(OH)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முற்றிலுமாக இச்சேர்மத்தின் பண்புகள் வரையறுக்கப்படவில்லை. சில சமயங்களில் நீரேற்ற செருமேனியம்(II) ஆக்சைடு அல்லது செருமேனசு ஐதராக்சைடு என்று அழைக்கப்படுகிறது. 1886 ஆம் ஆண்டு முதன் முதலில் இச்சேர்மத்தைப் பற்றி விவரித்தார்.[1] தயாரிப்புபொதுவாக GeII அயனிகள் கொண்ட அமிலக் கரைசலுடன் ஒரு காரத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் வெண்மை அல்லது மஞ்சள் நிற வீழ்படிவாக செருமேனியம்(II) ஐதராக்சைடு கிடைக்கும். உதாரணமாக செருமேனியம் ஈராக்சைடுடன் (GeO2) ஐப்போபாசுபரசு அமிலக் கரைசலைச் (H3PO2) சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தி செருமேனியம்(II) ஐதராக்சைடை உற்பத்தி செய்யலாம். மாற்றுமுறையில் GeCl2 சேர்மத்தை நீராற்பகுப்புக்கு உட்படுத்தியும் செருமேனியம்(II) ஐதராக்சைடு தயாரிக்கலாம்.[2] or alternatively by hydrolysis of GeCl2.[3] தொடக்கத்தில் கிடைக்கும் வீழ்படிவு விகிதவியல் அளவுகளில் அமையாது. GeO·xH2O, Ge(OH)2·xH2O என்ற பொதுவாய்ப்பாட்டல் அல்லது எளிமையாக Ge(OH)2 என்று இதை அடையாளப்படுத்தலாம். பண்புகள்தண்ணீரில் அல்லது காரத்தில் சிறிதளவு கரையும்.[4] பெர்குளோரிக் அமிலத்தில் கரையாது[2] என்றாலும் ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரையும்.[2] சோடியம் ஐதராக்சைடு காரத்துடன் வினையில் ஈடுபட்டு பழுப்பு நிற கரையாத திண்மத்தைக் கொடுக்கிறது. இத்திண்மத்தை வெற்றிடத்தில் உலர்த்தினால் (HGe)2O3 என்ற விகிதவியல் அளவிலான பழுப்பு நிற உடன் தீப்பற்றுகிற பொருள் உருவாகிறது. செருமேனியம்-ஐதரசன் பிணைப்பு (Ge-H) இத்திண்மத்தில் இருப்பதாக அகச்சிவப்பு நிறமாலை ஆய்வு தெரிவிக்கிறது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia