செருமேனியம் இருசல்பைடு
செருமேனியம் இருசல்பைடு (Germanium disulfide or Germanium(IV) sulfide) என்பது GeS2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் உயர் உருகுநிலை கொண்ட படிகவடிவத் திண்மமாக செருமேனியம் இருசல்பைடு காணப்படுகிறது[1][2]. மேலும் இது ஒரு முப்பரிமான பலபடியாக சிலிக்கன் இருசல்பைடிடம் இருந்து மாறுபடுகிறது. சிலிக்கன் இருசல்பைடு ஒருபரிமான பலபடியாகும். Ge-S பிணைப்பின் பிணைப்பு நீளம் 2.19 Å[3] ஆகும். வரலாறுசெருமேனியம் சேர்மங்களில் முதலாவதாகக் கண்டறியப்பட்டது செருமேனியம் இருசல்பைடு ஆகும். அர்கிரோடைட்டு கனிமத்தை பகுப்பாய்வு செய்து கொண்டிருந்த போது கிளெமென்சு விங்கிளர் இதைக் கண்டறிந்தார். செருமேனியம் சல்பைடு நீர்த்த அமிலங்களில் கரைவதில்லை என்ற அடிப்படையில் ஒரு புதிய தனிமத்தை அவரால் தனித்துப் பிரிக்க முடிந்தது[4] தயாரிப்புஅடர் ஐதரோ குளோரிக் அமிலக் கரைசலில் உள்ள செருமேனியம் குளோரைடில் ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தி செருமேனியம் இருசல்பைடு தயாரிக்கப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia