செருமேனியத்தின் டெட்ராபுரோமைடை செருமேனியம் அல்லது துத்தநாகம் தனிமத்துடன் சேர்த்து ஒடுக்க வினையின் மூலம் குறைத்து செருமேனியம் இருபுரோமைடு தயாரிக்கப்படுகிறது.[4][1]
பண்புகள்
செருமேனியம் இருபுரோமைடு என்பது மஞ்சள்-வெள்ளை நிறத்தில் காணப்படும் ஒரு திண்மப் பொருளாகும். எத்தனால் மற்றும் அசிட்டோனில் கரைகிறது. செருமேனியத்தின் டெட்ராபுரோமைடாகவும் செருமேனியமாகவும் இது விகிதாச்சாரமின்றி சிதைவடைகிறது. நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால் செருமேனியம் ஈராக்சைடாக மாற்றமடைகிறது.
P21/c (எண். 14) என்ற இடக்குழுவும், a = 11.68 Å, b = 9.12 Å, c = 7.02 Å, மற்றும் β = 101.9° என்ற அணிக்கோவை அளவுருக்களும் கொண்டு ஒற்றைச் சரிவச்சுப் படிகத்திட்டத்தில் செருமேனியம் இருபுரோமைடு படிகமாகிறது.[4][5]ஈதர் கரைப்பானில் உள்ள வளையபெண்டா டையீனைல் சோடியம் அல்லது வளையபெண்டா டையீனைல் தாலியத்துடன் வினைபுரிந்து செருமேனோசீனை உருவாக்குகிறது.[6]
↑ 4.04.1Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 959, ISBN0-12-352651-5
↑Roland C. Rouse, Donald R. Peacor, Bruce R. Maxim (1977-01-01), "The crystal structure of germanium dibromide*", Zeitschrift für Kristallographie - Crystalline Materials, vol. 145, no. 3–4, pp. 161–171, Bibcode:1977ZK....145..161R, doi:10.1524/zkri.1977.145.3-4.161, ISSN2194-4946{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)