செருமேனியம் இருகுளோரைடு
செருமேனியம் இருகுளோரைடு (Germanium dichloride) என்பது GeCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செருமேனியம் மற்றும் குளோரின் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் செருமேனியம் +2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது. தயாரிப்புசெருமேனியம் நாற்குளோரைடை , செருமேணியம் உலோகத்தின் மீது 650 0 செல்சியசு வெப்பநிலையில் செலுத்தும் போது திண்ம செருமேனியம் இருகுளோரைடு உண்டாகிறது[1]
குளோரோ செருமேன் , GeH3Cl 70 0 செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்தும் செருமேனியம் இருகுளோரைடு உண்டாகிறது[1]
வினைகள்செருமேனியம் இருகுளோரைடு நீராற்பகுப்பு அடைந்து மஞ்சள் நிறமான செருமேனியம்(II) ஐதராக்சைடு உருவாகிறது. இதை இலேசாக சூடாக்கும் போது பழுப்புநிறமான செருமேனியம் ஓராக்சைடு உண்டாகிறது.:[1]
ஐதரோ குளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட செருமேனியம் இருகுளோரைடு கரைசல் வலிமையான ஆக்சிசன் ஒடுக்கியாகச் செயல்படுகிறது[2]. குளோரைடு அயனியுடன் வினைபுரியும் போது பட்டைக்கூம்பு GeCl3− அயனியைக் கொண்டுள்ள அயனிச்சேர்மங்கள் உருவாகின்றன[3]. உதாரணமாக ருபீடியம் மற்றும் சீசியம் குளோரைடு சேர்மங்கள் உருத்திரிந்த பெரோவ்சிகைட்டு அமைப்பிலுள்ள RbGeCl3 சேர்மத்தைக் கொடுக்கிறது[1] மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடு பெரும்பாலும் இருகுளோரோசெருமைலீன் என்று அழைக்கப்படுகிறது. இது கார்பீனை ஒத்திருக்கிறது. வாயுநிலை GeCl2 சேர்மம் வளைந்த மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளதாக வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஊகிக்கிறது. ஈராக்சேன் அல்லது டையாக்சேன் அணைவுச் சேர்மம் வேதிவினைக்குத் தேவையான மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடினை வழங்கும் மூலமாக இருக்கிறது. GeCl2 அதிக வினைத்திறன் மிக்கதாகவும் பலவகையான வேதிப் பிணைப்புகளில் உட்புகும் தன்மையும் கொண்டு செயல்படுகிறது. மூலக்கூற்று நிலை GeCl2, இருகுளோரோசெருமைலீன்மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடு பெரும்பாலும் இருகுளோரோசெருமைலீன் என்று அழைக்கப்படுகிறது. இது கார்பீனை ஒத்திருக்கிறது. வாயுநிலை GeCl2 சேர்மம் வளைந்த மூலக்கூறு அமைப்பைக் கொண்டுள்ளதாக வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை ஊகிக்கிறது[4]. ஈராக்சேன் அல்லது டையாக்சேன் அணைவுச் சேர்மம் வேதிவினைக்குத் தேவையான மூலக்கூற்று நிலை செருமேனியம் இருகுளோரைடினை வழங்கும் மூலமாக இருக்கிறது. GeCl2 அதிக வினைத்திறன் மிக்கதாகவும் பலவகையான திப் பிணைப்புகளில் உட்புகும் தன்மையும் கொண்டு செயல்படுகிறது[5] மேற்கோள்கள்
. |
Portal di Ensiklopedia Dunia