செருமேனியம் செலீனைடு (Germanium selenide) என்பது GeSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். செஞ்சாய்சதுர படிகச் சமச்சீரில் கருப்பு நிறங்கொண்ட படிக தூளாக இச்சேர்மம் உள்ளது (உருக்குலைந்த NaCl-வகை); ~650 ° செல்சியசு வெப்ப நிலையில் இது கன சதுர NaCl கட்டமைப்பாக மாறுகிறது.[2] செருமேனியம் செலீனைடானது முப்பரிமாண வேதிச்செயல்திறன் மிக்க செருமேனியம் 4s எலக்ட்ரான் இணைகளை கொண்டிருக்கிறது. இவையே இச்சேர்மத்தின் உருக்குலைந்த அமைப்புக்கு காரணமாகின்றன. வெற்றிட அளவைப் பொறுத்தமட்டில் இணைதிறக் கற்றையின் உயர்ந்த நிலைக்கும் இவையே பொறுப்பாகும்.[3]
GeSe படிகங்களை வளர்க்க GeSe தூள் ஒரு மூட்டப்பட்ட கண்ணாடிக்குப்பியின் சூடான முனையில் ஆவியாகி குளிர்ந்த முனையில் ஒடுக்க அனுமதிக்கப்படுகிறது. வாயு ஊடகத்தில் வெப்பச்சலன இயக்கத்தால் வழக்கமான படிகங்கள் சிறியவையாகவும் ஒழுங்கற்ற வளர்ச்சியின் அறிகுறிகளோடும் உள்ளன. இருப்பினும், சுழிய ஈர்ப்பு விசையின் கீழ் வளர்க்கப்படும் GeSe ஆனது, விண்வெளி ஆய்வகத்தில் உள்ள வெப்பச்சலனத்தின் கீழ் பூமியில் வளரும் படிகங்களை விட ~10 மடங்கு பெரியதாகவும் பார்வைக் குறைபாடுகள் இல்லாதவையாகவும் உள்ளன.[4][5]
↑Wiedemeier H., Siemers P.A. (1975). "The Thermal Expansion and High Temperature Transformation of GeSe". Zeitschrift für anorganische und allgemeine Chemie411: 90–96. doi:10.1002/zaac.19754110110.
↑M. J. Smiles, J. M. Skelton, H. Shiel, L. A. H. Jones, J. E. N. Swallow, H. J. Edwards, T. J. Featherstone, P. A. E. Murgatroyd, P. K. Thakur, Tien-Lin Lee, V. R. Dhanak, and T. D. Veal (2021). "Ge 4s2 Lone Pairs and Band Alignments in GeS and GeSe for photovoltaics". J. Mater. Chem. A. doi:10.1039/D1TA05955F.
↑H. Wiedemeier (1975). "Crystal growth and transport rates of GeSe and GeTe in micro-gravity environment". Journal of Crystal Growth31: 36. doi:10.1016/0022-0248(75)90107-4.