செருமேனியம்(II) அயோடைடு
செருமேனியம்(II) அயோடைடு (Germanium(II) iodide) என்பது GeI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். செருமேனியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தயாரிப்புசெருமேனியம்(IV) அயோடைடுடன் ஐதரோ அயோடிக் அமிலம், ஐதரோ பாசுபரசு அமிலம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்:[1]
செருமேனியம் மோனோசல்பைடு அல்லது செருமேனியம் மோனாக்சைடுடன் ஐதரசன் அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகும்.[1]
200 – 400 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியமும் அயோடினும் நேரடியாக வினையில் ஈடுபட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது.:[1]
HGeI3சேர்மம் சிதைவுக்கு உட்பட்டாலும் செருமேனியம்(II) அயோடைடு உருவாகிறது. HGeCl3உடன் ஐதரோ அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினை புரியச்செய்தால் HGeI3 சேர்மத்தை தயாரிக்கமுடியும்:[5]
பண்புகள்செருமேனியம்(II) அயோடைடு மஞ்சள் நிறப் படிகமாகும். இது ஈரப்பதத்தின் முன்னிலையில் செருமேனியம்(II) ஐதராக்சைடாக மெதுவாக நீராற்பகுப்பு அடைகிறது. ஐதரோ கார்பன்களில் இது கரையாது. குளோரோஃபார்மிலும் கார்பன் டெட்ராகுளோரைடிலும் சிறிது கரைகிறது. a = 413 பைக்கோ மீட்டர் மற்றும் c = 679 பைக்கோமீட்டர்[1]என்ற அளபுருக்களுடன் செருமேனியம்(II) அயோடைடு சேர்மம் காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்றுகொள்கிறது. 550 பாகை செல்சியசு வெப்பநிலையில் செருமேனியம் மற்றும் செருமேனியம் டெட்ரா அயோடைடாக விகிதாசாரமின்றி இது சிதைகிறது.[6] பண்புகள்செருமேனியம்(II) அயோடைடு கார்பீனுடன் வினைபுரிந்து நிலையான சேர்மங்களை உருவாக்க்குகிறது.[2] மின்னணுவியல் துறையில் செருமேனியம் அடுக்குகளை விகிதாசாரமற்ற வினைகள் மூலம் உருவாக்கப் பயன்படுகிறது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia