தட்சசீலம் (Taxila) (Urdu: ٹيکسلا), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ளது. பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத் நகரத்திலிருந்து வடமேற்கே 32 கி.மீ. தொலைவில் தட்சசீலம் நகரம் உள்ளது.
சமசுகிருத மொழியில், பண்டைய தட்சசீலம் நகரத்தை தக்சசீலா என்றும் பாலி மொழியில் தக்கசிலா[2]
என்றும் அழைப்பர். பண்டைய தட்சசீலம் நகரத்தில் கிமு 3,360 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான ஆதாரங்கள், இங்குள்ள ஹத்தியால் தொல்லியல் அகழ்வாய்வுகள் மூலம் அறியப்பட்டுள்ளது.
[3]மகாபாரத இதிகாசத்தை முதன் முதலாக, தட்சசீலம் நகரத்தில் வைத்து வைசம்பாயனர், தன் சீடர்களுக்கு உரைத்ததாக கருதப்படுகிறது.
[4][5] பண்டைய உலகப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான தட்சசீல பல்கலைக்கழகம், பண்டைய தட்சசீலம் நகரத்தில் நன்கு செயல்பட்டது.[6][7][8][9][10]
வெட்டி எடுக்கப்பட்ட கற்களால் இந்நகரம் நிறுவப்பட்டதால், சமசுகிருத மொழியில் தட்சசீலம் எனப்பெயராயிற்று. இராமரின் தம்பி பரதன் தன் மகன் தட்சனின் பெயரால் இந்நகரை நிறுவியதால், சமசுகிருத மொழியில் இந்நகரை தட்சனின் பாறை என்றும் அழைப்பர்.[13]
கிரேக்க புவியியல் அறிஞரான தாலமி வரைந்த உலகப் புவியியல் வரைபடத்தில் தட்சசீலம் நகரத்தை, தக்சீலா எனக் குறித்துள்ளார்.[14]
கிமு 3360 முதல் தட்சசீலம் நகரத்தில் மனிதர்கள் நாகரீகத்துடன் வாழ்ந்தனர் என்பதை, இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் அறியப்படுகிறது.
[15] கிமு 2900 காலத்திய சிந்து வெளி நாகரீகம் மற்றும் ஹரப்பா காலத்திய கட்டுமானங்கள் மற்றும் தொல்பொருட்கள் தட்சசீலம் நகர அகழ்வாய்வின் போது கிடைத்துள்ளது.[15] சிந்து வெளி நாகரீகத்தின் அழிவின் போது, தட்சசீலம் நகரமும் கைவிடப்பட்டுள்ளது.
பின்னர் தட்சசீலம் நகரத்தின் முதல் பெரிய குடியிருப்பு கிமு 1100ல் நிறுவப்பட்டது.[3][16][17][18] கிமு 900ல், தட்சசீலம் காந்தார நாட்டின் தலைநகரான புஷ்கலாவதியுடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந்தது என இந்நகரத்தில் கிடைத்த மண்பாண்ட சில்லுகள் மூலம், அறியப்படுகிறது.[19]
சீன பௌத்த பிக்குவானயுவான் சுவாங் கிபி 400ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலப் பல்கலைக்கழகம் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்ததாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.
[22]
வெள்ளை ஹூணர்களான ஹெப்தலைட்டுகள் ஆட்சியில், கிபி 470ல் காந்தாரம் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றும் போது தட்சசீலம் நகரத்தின் பௌத்த விகாரங்கள் மற்றும் தூபிகள் முற்றிலும் அழிக்கப்பட்டது.
[23] சீன பௌத்த பிக்குவானயுவான் சுவாங் கிபி 630 மற்றும் 643ல், பண்டைய தட்சசீல நகரத்திற்கு வருகை புரிந்த போது தட்சசீலம் நகரமும், தட்சசீலப் பல்கலைக்கழகமும் சிதிலமடைந்து காணப்பட்டதாக தனது பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.
அகழாய்வில் பண்டைய தட்சசீல நகரம்
அலெக்சாண்டர் கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞரால், 19ம் நூற்றாண்டின் மத்தியில், சராய் கோலா எனுமிடத்தில், நடத்தப்பட்ட அகழாய்வில், சிதிலமைடந்த பண்டைய தட்சசீல நகரம் கண்டெடுக்கப்பட்டது. தட்சசீலம் அருகே உள்ள தர்மராஜிக தூபியைஜான் மார்ஷல் எனும் பிரித்தானியர் அகழ்வாய்வு செய்து பல பௌத்த தொல்பொருட்கள் மற்றும் தூபிகள் மற்றும் விகாரைகளை வெளிப்படுத்தினார்.
தட்சசீல நகரத்திற்கு அருகே அமைந்த சௌலியன்பௌத்தவிகாரை
இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்நகரம் பன்னாட்டு பௌத்த யாத்திரைத் தலங்களில் ஒன்றாக உள்ளதால், பன்னாட்டு பௌத்த சமயப் பயணிகளின் வருகையால் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டுகிறது.[25] இந்நகரத்தில் தட்சசீல அருங்காட்சியகத்தில் பண்டைய தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.[26]
↑Balakrishnan Muniapan, Junaid M. Shaikh (2007), "Lessons in corporate governance from Kautilya's அர்த்தசாஸ்திரம் in ancient India", World Review of Entrepreneurship, Management and Sustainable Development3 (1):
"Kautilya was also a Professor of Politics and Economics at Taxila University. Taxila University is one of the oldest known universities in the world and it was the chief learning centre in ancient India."
"Thus the various centres of learning in different parts of the country became affiliated, as it were, to the educational centre, or the central university, of Taxila which exercised a kind of intellectual suzerainty over the wide world of letters in India."
↑Radha Kumud Mookerji (2nd ed. 1951; reprint 1989), Ancient Indian Education: Brahmanical and Buddhist (p. 479), Motilal Banarsidass Publ., பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-208-0423-6:
"This shows that Taxila was a seat not of elementary, but higher, education, of colleges or a university as distinguished from schools."
↑J. W. McCrindle, The Invasion of India by Alexander the Great as Described by Arrian, Q. Curtius, Diodorus, Plutarch and Justin, Westminster, Constable, 1893, pp.343-344.