தாண்டல் உலோகம்தாண்டல் உலோகங்கள் (Transition metals) என்பன d உபசக்திமட்டத்தில் இறுதி இலத்திரனைக் கொண்ட மூலகங்களாகும். இவை மூன்று ஆவர்த்தனங்களில் காணப்படும் முப்பது மூலகங்களைக் கொண்டுள்ளன. இவை சிக்கலயன்களை உருவாக்கக்கூடியவை. IUPAC வரைவிலக்கணம்:- தாண்டல் உலோகம் என்பது "நிரம்பாத d உப ஒழுக்கை உடைய ஒரு மூலகம் அல்லது நிரம்பாத d உப ஒழுக்கை உடைய நேரயனை உருவாக்கக் கூடிய ஒரு மூலகம்" ஆகும்[1]. IUPAC வரைவிலக்கணம் இவ்வாறு காணப்பட்டாலும் இவ்வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படாத சிகாண்டியம், துத்தநாகம் ஆகிய மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் பல்வேறு புத்தகங்களில் உள்ளடக்கப்படுகின்றன. அதாவது பொதுவாக ஆவர்த்தன அட்டவணையின் அனைத்து d-தொகுப்பு மூலகங்களும் தாண்டல் உலோகங்களுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. உள்ளடக்கப்படும் மூலகங்கள்
இங்கு d10 s2 இலத்திரன் நிலையமைப்புள்ள நாகம், இரசம் ஆகிய உலோகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகம் எப்போதும் நிரம்பிய d ஒழுக்கு உடைய Zn2+ அயனை உருவாக்குவதால் நாகத்தை தாண்டல் உலோகமாக IUPAC வகைப்பாட்டின் படி உள்ளடக்கப்பட முடியாது. எனினும் எளிமைத் தன்மைக்காக நாகம், இரசம் ஆகியவயும் தாண்டல் உலோகங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. செப்பு மூலக நிலையிலும், +1 ஒக்சியேற்ற நிலையிலும் முழுமையான d-ஒழுக்கைக் கொண்டிருந்தாலும், +2 ஒக்சியேற்ற நிலையைக் கொண்டிருப்பதால் அது தாண்டல் உலோகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவான பண்புகள்பல ஒக்சியேற்றல் நிலைகள்தாண்டல் உலோகங்களின் விசேட பண்புகளில் ஒன்றாக பல ஒக்சியேற்ற நிலைகளைக் கொண்டிருத்தல் உள்ளது. உதாரணமாக மங்கனீசு 0, +2, +7 ஆகியவற்றைக் காட்டும்; இரும்பு பொதுவாக 0, +2, +3 ஆகிய நிலைகளைக் காட்டும்; எனினும் மங்கனீசு வரையான அனைத்து தாண்டல் மூலகங்களும் அவற்றின் இறுதி சக்திப்படியிலுள்ள இலத்திரன்களின் எண்ணிக்கைக்கு சமனானளவு உயர் ஒக்சியேற்ற நிலைகளைக் காட்டுகின்றன. உதாரணமாக வனேடியம் 0 தொடக்கம் +5 வரையும், மங்கனீசு 0 தொடக்கம் +7 வரையும் காட்டுகின்றன. இதனால் தாண்டல் மூலகங்கள் பல்வேறு வலுவளவுகளுடன் சேர்வைகளை ஆக்குகின்றன. உதாரணமாக இரும்பு ஆக்சிசனுடன் தாக்கமடைந்து +2 ஒக்சியேற்ற நிலையுடன் FeO அல்லது +3 ஒக்சியேற்ற நிலையுடன் Fe2O3 ஆகிய இரு சேர்வைகளை உருவாக்கலாம். நிறமுள்ள சேர்வைகள்![]() 3) 2 (செந்நிறம்); K 2Cr 2O 7 (செம்மஞ்சள்); K 2CrO 4 (மஞ்சள்); NiCl 2 (வெளிர் நீலம்); CuSO 4 (நீலம்); KMnO 4 (ஊதா). தாண்டல் உலோகங்களின் இலத்திரன்கள் இலகுவாக சக்தியை உறிஞ்சி அருகருகே உள்ள ஒழுக்குகளிடையே பரிமாற்றப்படுவதால் அவை உறிஞ்சும் சக்திக்கேற்றபடி நிறத்தைக் காலுகின்றன. குறிப்பாக தாண்டல் உலோகம் அதியுயர் ஒக்சியேற்ற நிலையில் இருக்கும் போது நிறத்தை இலகுவாக வெளிப்படுத்துகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia