திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் இண்டர்சிட்டி அதிவிரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி - திருநெல்வேலி இன்டர்சிட்டி விரைவுவண்டி (Tiruchirappalli – Tirunelveli Intercity Express) ஓர் அதிவிரைவு வண்டி ஆகும், இத்தொடருந்து இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாநகரத்தினையும், திருவனந்தபுரம் மாநகரத்தினையும் மதுரை வழியே இணைக்கிறது. இந்த தொடருந்து 2012-2013 இரயில்வே நிதிநிலை அறிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.[2][3] தொடருந்து எண் 22627/22628, இது 14 சூலை 2012 அன்று முதன்முதலாக இயக்கப்பட்டது..[4][5] 15 சூலை 2012 அன்று முதல் தினமும் இயக்கப்படுகிறது.[6] தொடக்கத்தில், திருநெல்வேலி வரை இயக்கப்பட்ட இவ்வண்டி 15 சூலை 2017 முதல் திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது [7]. பெட்டிகள் அமைப்புஇந்தத் தொடருந்தில், 15 பெட்டிகள் உள்ளன, 1 குளிரூட்டப்பட்ட பெட்டி(CC), ஆறு இரண்டாம் நிலை உட்காரும் பெட்டிகள் (2S), ஆறு பொதுப் பெட்டிகள் (UR/GS), ஒரு சரக்குப் பெட்டி (SLR), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் இரண்டாம் நிலைப் பெட்டியும் (SLRD) உள்ளன.[b]
அட்டவணை22627/திருச்சிராப்பள்ளி - திருவனந்தபுரம் அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [8][c]
22628/திருவனந்தபுரம் - திருச்சிராப்பள்ளி அதிவிரைவு இன்டர்சிட்டி வண்டி [9][d]
மேலும் பார்க்க
குறிப்புகள்சான்றுகள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia