அனந்தபுரி விரைவு வண்டி
அனந்தபுரி விரைவுவண்டி (ஆங்கிலம்: Ananthapuri Express) சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக கார்டு லைனில் இயக்கப்படுகின்றது. இது தினமும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து வண்டி எண்:20635 19:50 மணிக்கு புறப்பட்டு கொல்லம் சந்திப்பை மறுநாள் 11:00க்கு வந்தடையும், மறுமார்க்கத்தில் வண்டி எண்:20636 கொல்லம் சந்திப்பிலிருந்து 14:40க்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னை எழும்பூரை 06:40 மணிக்கு அடைகிறது.இது WAP-4 எனும் 5350HP மற்றும் WAP-7 எனும் 7000HP திறன் கொண்ட இரு மின்சார எஞ்சின்கள் கொண்டு இயக்கப்படுகிறது.[1][2][3] வரலாறுஇந்த ரயிலின் தொடக்க விழா ஜூன் 30, 2002 அன்று நடைபெற்றது.[1] முதலில் வாரத்திற்கு ஆறு நாட்கள் மட்டும் இயக்கப்பட்டது, பின்னர் 2005 ஆம் ஆண்டில் இது தினசரி ரயிலாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் இது சென்னை எழும்பூர் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ஓடியது. திருவனந்தபுரம் நகரத்தின் பெயரால் இது அனந்தபுரி என்று பெயரிடப்பட்டது. 2017 ரயில்வே பட்ஜெட்டில், இது நவம்பர் 1, 2017 முதல் கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது.[2][4][5] வழித்தடம்இது திருவனந்தபுரம் சென்ட்ரல், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி- விழுப்புரம் இடையே உள்ள குறைந்த தூரப் பாதையான 'கார்டு லைன் வழியாக இயக்கப்படுகின்றது. கால அட்டவனை
பெட்டி வரிசைஇந்த விரைவு வண்டியில் ஐ. சி. எப். (UTKRISHT) 23 பெட்டிகள் பின்வரும் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia