கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம்
கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Kollam Junction railway station) இந்திய மாநிலமான கேரளத்தின் கொல்லம் நகரத்தில் அமைந்துள்ளது. பரப்பளவில் கேரளாவின் இரண்டாவது பெரிய ரயில் நிலையம் கொல்லம் இரயில் நிலையமாகும். மாநிலத்தின் மிகப் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட இரயில்வே நடைமேடை கொல்லம் இரயில் நிலையத்தில் அமைந்துள்ளது [2][3][4]. கொல்லம் சந்திப்பு இரயில் நிலையம் கொல்லம்-திருவனந்தபுரம் வழித்தட வரிசையில் அமைந்துள்ளது. இது இந்திய ரயில்வேயின் தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படுகிறது மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட்த்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. கொல்லம் இரயில் நிலையத்தின் ஓராண்டு பயணிகள் அனுமதிச்சீட்டு விற்பனை வருவாய். 64.23 கோடி ஆகும். இது அமெரிக்க டாலர் $ 9.7 மில்லியனுக்கு சமமாகும். 23,048 பயணிகள் கொல்லம் இரயில் நிலையத்தின் வழியாக தினசரி பயணம் செய்கிறார்கள் [5] . பயணச் சீட்டு விற்பனை இட வசதியுடன் இரண்டு முனையங்களைக் கொண்ட கேரளாவின் சில இரயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். கொல்லம் சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து தென்னிந்திய நகரங்களான சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திற்கு மூன்று விரைவு இரயில்கள் இங்கிருந்து புறப்படுகின்றன. விசாகப்பட்டினம்-கொல்லம் வாரந்திர விரைவு இரயில் [6], அனந்தபுரி விரைவு இரயில் [7] மற்றும் சென்னை எக்மோர்-கொல்லம் சந்திப்பு விரைவு இரயில் ஆகியவை அம்மூன்று இரயில்களாகும் [8]. வரலாறு![]() வளர்ந்து வரும் புதிய இந்திய இரயில்வேயுடன் இணைக்கப்பட்ட கேரளாவின் ஐந்தாவது நகரம் கொல்லம் ஆகும். திருவாங்கூர் இராச்சியத்தின் வர்த்தக தலைநகரான கொல்லத்திலிருந்து சென்னை வரையிலான வரையிலான இரயில் இணைப்பு பற்றிய யோசனை முதன் முதலில் 1873 இல் உருவானது. இந்த பாதையை மெட்ராசு மாகாணம் 1899 ஆம் ஆண்டில் அனுமதித்தது மற்றும் 1900 ஆமாவது ஆண்டில் இதற்கான ஒரு கணக்கெடுப்பு நிறைவடைந்தது. தென்னிந்திய இரயில்வே, திருவிதாங்கூர் மாநிலம் மற்றும் மெட்ராசு மாகாணம் ஆகியவை கூட்டாகச் சேர்ந்து இதை கட்டினர். ஆங்கிலத்தில் குயிலோன் என்றழைக்கப்படும் கொல்லம் இரயில் நிலையம் 1904 ஆம் ஆண்டில் திருவாங்கூர் மகாராசா சிறீ மூலம் திருனல் ராம வர்மா அவர்களால் கட்டப்பட்டது. அவரது மாநிலத்தின் வணிக தலைநகரான கொல்லத்திற்கும் சென்னைக்கும் இடையில் ஓர் இரயில் பாதை இணைப்பை உருவாக்குவது ஆட்சியாளரின் விருப்பமாக இருந்தது[9] கொல்லம் முதல் புனலூர் வரையிலான மீட்டர் அளவு இரயில் பாதை 1904 சூன் மாதம் 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. கொல்லம்-செங்கோட்டை இரயில் பாதை 1904 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 அன்று திறக்கப்பட்டது. மீட்டர் அளவு இரயில் பாதை பின்னர் பராவூர் மற்றும் வர்கலா வழியாக சாலாவிற்கு திருவனந்தபுரத்திலிருந்து நீட்டிக்கப்பட்டு 1918 ஆம் ஆண்டு சனவரி 4 அன்று திறக்கப்பட்டது[10] கொல்லத்திலிருந்து செல்லும் மீட்டர் அளவு இரயில் பாதை கோட்டயம் வழியாக எர்ணாகுளம் வரை 1958 ஆம் ஆண்டு சனவரி மாதம் ஆறாம் நாள் நீட்டிக்கப்பட்டது. கொல்லம் எர்ணாகுளம் இடையிலான மீட்டர் அளவு இரயில் பாதை 1975 ஆம் ஆண்டு அகலப் பாதையாக மாற்றப்பட்டு 1976 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. புனலூர் மற்றும் கொல்லம் பிரிவுகளுக்கு இடையிலான அகலப் பாதை மாற்றம் 2010 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாளில் திறக்கப்பட்டது. ஒரு காலத்தில் குயிலன் சந்திப்பு மற்றும் ஆசிரம மைதானத்தை இணைக்கும் 2.4 கிலோமீட்டர் (1.5 மைல்) மீட்டர் அளவு இரயில் பாதை இருந்தது. 1904 ஆம் ஆண்டில் கொல்லம்-புனலூர் மீட்டர் அளவு இரயில் பாதை திறக்கப்பட்டபோது, குயிலோன்-செங்கோட்டை இரயில் பாதைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய இயந்திரப் பகுதிகள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து குயிலோன் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டன. அவை ஆசிரம மைதானத்தின் திறந்த வெளி அரங்கில் பொறுத்தப்பட்டன. இந்த இயந்திரங்களை பிரதான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக அப்போது பாதை அமைக்கப்பட்டது. நகர விரிவாக்கத்தை அனுமதிக்கும் பொருட்டு 2000 ஆம் ஆண்டில் இந்த தற்காலிகப் பாதை அகற்றப்பட்டது. அமைப்புத் திட்டம்கொல்லம் இரயில் நிலையத்தில் 17 வழித்தடங்கள் உள்ளன. இரண்டு தடங்கள் பிராதானபாதை மின் பன்மடங்கு அலகு கொட்டாரம் வழியாகச் செல்கின்றன. தொலை தூரம் செல்லும் பயணிகளை கையாள்வதற்கும், சரக்கு இரயில் போக்குவரத்திற்கும் என இங்கு ஆறு நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடை ஒன்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரிவு திருவனந்தபுரம் நோக்கிய இரயில்கள் செல்லவும் மற்றொரு பிரிவு புனலூர்-செங்கோட்டை பாதைக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டு நடைமேடைகளும் சேர்ந்து 1180.5 மீட்டர் நீளத்திற்கு அமைந்து இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட நடைமேடை என்ற சிறப்பைப் பெறுகின்றன [11]. தொடர்வண்டிகள்இங்கிருந்து புறப்படும் சில ரயில்கள்:
வசதிகள்இந்த நிலையத்தில் கீழ்க்காணும் வசதிகள் உள்ளன.[12]
சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia