துத்தநாக அசைடு
துத்தநாக அசைடு (Zinc azide) Zn(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தநாக (Zn2+) நேர்மின் அயனிகளும் அசைடு (N−3) எதிர்மின் அயனிகளும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வெண்மை நிறத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட திண்மப் பொருளாக துத்தநாக அசைடு உருவாகிறது. ஈரெத்தில் துத்தநாகத்துடன் ஐதரசோயிக் அமிலத்தை சேர்த்து வினைபுரியச் செய்தால் துத்தநாக அசைடு உற்பத்தியாகிறது.:[1]
பண்புகள்துத்தநாக அசைடு என்பது ஓர் ஒருங்கிணைப்பு பலபடியாகும். இது மூன்று பல்லுருதோற்றங்களில் படிகமாகிறது. இம்மூன்றின் கட்டமைப்பிலும் நான்முகி துத்தநாக மையங்கள் அசைடு ஈந்தணைவிகளுடன் பாலம் அமைக்கின்றன. α-Zn(N3)2 வடிவ துத்தநாக அசைடு ஒற்றைச்சாய்வு இடக்குழுவில் படிகமாகிறது. இது நிலைப்புத்தன்மையையும் கொண்டிருக்கும். மற்ற இரண்டு வடிவங்களும் சிற்றுறுதி நிலை நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. β-Zn(N3)2 முக்கோண வடிவமும் P3221 என்ற இடக்குழுவும், γ-Zn(N3)2 வடிவம் ஒற்றைச் சரிவச்சும் C2 இடக்குழுவும் கொண்ட படிகத்திட்டத்தில் படிகமாகின்றன. துத்தநாக அசைடு எளிதில் நீராற்பகுப்பு அடைகிறது. மேலும் இதை நீரிய கரைசலில் தயாரிக்கும் முயற்சியின் விளைவாக கார அசைடுகள் வீழ்படிவாகின்றன. (Zn(OH)2−x(N3)x (x = 0.9–1.0).) α- மற்றும் β-வடிவங்கள் இரண்டும் மிகவும் உராய்வு மற்றும் அதிர்ச்சி உணர்திறன் கொண்டவையாகும். நீல நிறத் தீச்சுவாலையில் தீவிரமாக வெடிக்கின்ற்ன. மெல்ல சூடாக்க்கும் போது இவை சிதைவடைந்து நைட்ரசன் வாயுவைக் கொடுக்கின்றன. மந்த வளிமண்டல சூழலில் மூடிய கண்ணாடிக் குழாயில், இது துத்தநாக நைட்ரைடு சேர்மத்தைக் கொடுக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia