துத்தநாக நைட்ரைடு
இனங்காட்டிகள்
1313-49-1 Y
பண்புகள்
Zn3 N2
வாய்ப்பாட்டு எடை
224.15 கி/மோல்[ 1]
தோற்றம்
சாம்பல் நிறத் தூள்[ 1]
அடர்த்தி
6.22 g/cm³, திண்மம்[ 1]
கரையாது (சிதைவடையும்)
கட்டமைப்பு
படிக அமைப்பு
கனசதுரம் , cI80
புறவெளித் தொகுதி
Ia-3, No. 206[ 1] [ 2]
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு
பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
துத்தநாக நைட்ரைடு (Zinc nitride) என்பது Zn3 N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும் . துத்தநாகம் மற்றும் நைட்ரசன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தூய்மையான நிலையில் இச்சேர்மம் கனசதுர அமைப்பில் காணப்படுகிறத[ 1] [ 2]
வேதியியல் பண்புகள்
காற்றிலா சூழலில் துத்தநாகமைடு என்றழைக்கப்படும் துத்தநாக ஈரமீன், 200° செ வெப்பநிலையில் வெப்பச் சிதைவு மூலமாக துத்தநாக நைட்ரைடாக உருவாகிறது. [ 3] அமோனியா இவ்வினையில் உடன் விளை பொருளாக கிடைக்கிறது.[ 4]
3Zn(NH2 )2 → Zn3 N2 + 4NH3
துத்தநகத்தை 600° செ வெப்பநிலைக்கு அமோனியா பாய்வில் சூடுபடுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்.ஐதரசன் வாயு உடன் விளைபொருளாக உண்டாகிறது.[ 3] [ 5]
3Zn + 2NH3 → Zn3 N2 + 3H2
துத்தநாக நைட்ரைடு தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிந்து அமோனியா மற்றும் துத்தநாக ஆக்சைடாக உருவாகிறத[ 3] [ 4]
Zn3 N2 + 3H2 O → 3ZnO + 2NH3
துத்தநாக நைட்ரைடு, ஐதரோ குளோரிக் அமிலத்தில் [ 6] கரைகிறது. மின்வேதியியல் முறையில் மீள்வினையாக இலித்தியத்துடன் வினைபுரிகிறது.[ 7] மக்னீசியம் நைட்ரைடு (Mg3 N2 ) மற்றும் இலித்தியம் நைட்ரைடு Li3 N) போல இச்சேர்மமும் உயர் உருகுநிலை கொண்டுள்ளது[ 8] .
மேற்கோள்கள்
↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Sangeeta, D. (1997). Inorganic Materials Chemistry Desk Reference . CRC Press . p. 278. ISBN 978-0-8493-8900-9 . Retrieved 2007-09-30 .
↑ 2.0 2.1 Partin, D. E.; Williams, D. J.; O'Keeffe, M. (1997). "The Crystal Structures of Mg3 N2 and Zn3 N2 " . Journal of Solid State Chemistry 132 (1): 56–59. doi :10.1006/jssc.1997.7407 . Bibcode: 1997JSSCh.132...56P . http://www.ingentaconnect.com/content/els/00224596/1997/00000132/00000001/art97407 . பார்த்த நாள்: 2015-11-02 .
↑ 3.0 3.1 3.2 Roscoe, H. E. ; Schorlemmer, C. (1907) [1878]. A Treatise on Chemistry: Volume II, The Metals (4th ed.). London: Macmillan . pp. 650– 651. Retrieved 2007-11-01 .
↑ 4.0 4.1 Bloxam, C. L. (1903). Chemistry, Inorganic and Organic (9th ed.). Philadelphia: P. Blakiston's Son & Co. p. 380. Retrieved 2007-10-31 .
↑
Lowry, M. T. (1922). Inorganic Chemistry . Macmillan . p. 872. Retrieved 2007-11-01 .
↑
Comey, A. M.; Hahn, D. A. (1921). A Dictionary of Chemical Solubilities: Inorganic (2nd ed.). New York: Macmillan . p. 1124. Retrieved 2007-11-01 . {{cite book }}
: CS1 maint: multiple names: authors list (link )
↑ Amatucci, G. G.; Pereira, N. (2004). "Nitride and Silicide Negative Electrodes". In Nazri, G.-A.; Pistoia, G. (ed.). Lithium Batteries: Science and Technology . Kluwer Academic Publishers . p. 256. ISBN 978-1-4020-7628-2 . Retrieved 2007-11-01 . {{cite book }}
: CS1 maint: multiple names: authors list (link )
↑ Grolier Incorporated (1994). Academic American Encyclopedia . Danbury, CT: Grolier Inc. p. 202. ISBN 978-0-7172-2053-3 . Retrieved 2007-11-01 .
உசாத்துணை
Futsuhara, M.; Yoshioka, K.; Takai, O. (1998). "Structural, electrical and optical properties of zinc nitride thin films prepared by reactive RF magnetron sputtering". Thin Solid Films (எல்செவியர் ) 322 (1): 274–281. doi :10.1016/S0040-6090(97)00910-3 . Bibcode: 1998TSF...322..274F .
Lyutaya, M. D.; Bakuta, S. A. (1980). "Synthesis of the nitrides of Group II elements". Powder Metallurgy and Metal Ceramics (Springer ) 19 (2): 118–122. doi :10.1007/BF00792038 .
புற இணைப்புகள்
துத்தநாகம் (I)
கரிம துத்தநாகம் (I) சேர்மங்கள்
துத்தநாகம் (II) கரிம துத்தநாகம் (II) சேர்மங்கள்