துத்தநாக பைரோபாசுபேட்டு (Zinc pyrophosphate) என்பது Zn2P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். Zn2+ நேர்மின் அயனியும் பைரோபாசுபேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
துத்தநாக அமோனியம் பாசுபேட்டு வெப்பத்தால் சிதவைடையும் போது துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது. [2]
2 ZnNH4PO4 → Zn2P2O7 + 2 NH3 + H2O
சோடியம் கார்பனேட்டு, துத்தநாக ஆக்சைடு, அமோனியம் ஈரைதரசன் பாசுபேட்டு ஆகிய சேர்மங்கள் ஒன்றாகச் சேர்ந்து வினைபுரிந்தாலும் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது.[3]
துத்தநாக சல்பேட்டின் வலிமையான அமிலக் கரைசலுடன் சோடியம் பைரோபாசுபேட்டைச் சேர்த்து சூடுபடுத்தினால் துத்தநாக பைரோபாசுபேட்டு உருவாகிறது.[4]
2 ZnSO4 + Na4P2O7 → Zn2P2O7 + 2 Na2SO4
பண்புகள்
துத்தநாக பைரோபாசுபேட்டு வெண்மை நிறத்தில் படிகங்களாகக் காணப்படுகிறது. தண்ணீரில் இது கரையாது.[5] தண்ணீர் சேர்த்து சூடாக்கும்போது, துத்தநாக பைரோபாசுபேட்டு சிதைந்து Zn3(PO4)2 மற்றும் ZnHPO4 ஆகிய சேர்மங்களாக மாறுகிறது. ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் இது படிகமாகிறது. α-வடிவம் குறைந்த வெப்பநிலையிலும் β-வடிவம் அதிக வெப்பநிலையிலும் படிகமாகின்றன.[2][3]
பயன்கள்
துத்தநாக பைரோபாசுபேட்டு ஒரு நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] துத்தநாகத்தின் எடையறி பகுப்பாய்வில் இது பயனுள்ளதாக இருக்கும்.[6]
மேற்கோள்கள்
↑
Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, Florida: CRC Press, pp. 4–96, ISBN0-8493-0594-2