நாக சல்பைடு
ZnS என்ற மூலக்கூற்றுச் சூத்திரத்தைக் கொண்ட அசேதனச் சேர்மமே நாக சல்பைடு ஆகும். இது ஸ்பேலரைட் எனும் தாதுப் பொருளில் காணப்படும். இத்தாதுப் பொருள் பல்வேறு மாசுகளின் கலவையால் கறுப்பு நிறமாகக் காணப்பட்டாலும், தூய நாக சல்பைடு வெள்ளை நிறமானது. இதன் வெண்ணிறம் காரணமாக நாக சல்பைடு பரவலாக நிறத்துணிக்கைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது. செயற்கையாக உருவாக்கப்படும் அடர்த்தி கூடிய நாக சல்பைடு ஒளி ஊடுபுகவிடுவதாகவும் இருக்கலாம். கதிரியக்கத்தோடு தொடர்புபட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில் நாக சல்பைடு கதிர்கள் சென்ற பாதையைக் காட்டும் காட்டியாகப் பயன்படுத்தப்படுகின்றது. கட்டமைப்புநாக சல்பைடு இரண்டு பிரதான கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளது. இரண்டு கட்டமைப்புகளும் சிறு வித்தியாசங்களுடன் நான்முக வடிவில் அணுக்கள் காணப்படும். இவற்றில் நிலைப்புத் தன்மையுடைய வடிவம் ஸின்க்-பிளென்ட் அல்லது ஸ்பேலரைட் எனப்படும். இதனை 1020 °C வெப்பநிலைக்கு சூடாக்குவதால் மற்றைய நிலைக்கு மாற்றியமைக்கலாம். பயன்பாடுகள்கதிரியக்கத்தைக் காட்டும் பொருள்நாக சல்பைடுடன் செம்பு, வெள்ளி, மங்கனீசு போன்றவற்றில் ஏதாவதொன்றின் சிறிதளவு கலக்கப்பட்டால் அது கதிரியக்கப் பாதையைக் காட்டப் பயன்படுத்தப்படலாம். கதிரியக்கம் இவ்வாறு உருவாக்கப்பட்ட நாக சல்பைடில் படும் போது நாக சல்பைடுடன் கலக்கப்பட்ட மாசுக்கு ஏற்ற படி வெவ்வேறு நிறங்களைக் காட்டும். செம்புடன் நீண்ட நேரத்துக்குப் பச்சை நிற ஒளிர்வையும், வெள்ளியுடன் நீல நிற (அலைநீளம்- 450 nm)ஒளிர்வையும், மங்கனீசுடன் சிவப்பு நிற (அலை நீளம்- 590 nm) ஒளிர்வையும் காட்டும். இத்தொழிற்பாட்டை இருளான இடத்திலேயே நன்றாக அவதானிக்கலாம். கத்தோட்டுக் கதிர்க் குழாய்களிலும், x-கதிர் திரைகளிலும், அல்பா கதிர்களின் திரையாகவும் பயன்படுத்தப்படுகின்றது. நிறத்துணிக்கைநாக சல்பைடு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நிறத்துணிக்கையாகும். இது பேரியம் சல்பேட்டுடன் கலக்கப்பட்டு லித்தோபோன் எனப்படும் வெண்ணிறத் துணிக்கைகளை ஆக்கப் பயன்படுத்தப்படுகின்றது. குறைகடத்திஇது கலியம் ஆர்சனைடு போன்ற ஒரு குறை கடத்தியாகும். இது மாசாக்கப்பட்டு n/p என இரு வகையான குறை கடத்திகளாகவும் பயன்படுத்தப்படலாம். உற்பத்திபல்வேறு கைத்தொழிகளின் பக்க விளைவுகளைத் தாக்கமடையச் செய்வதனால் நாக சல்பைடை உற்பத்தி செய்யலாம். மெத்தேனிலிருந்து (இயற்கை வாயுவின் பிரதான கூறு) அமோனியாவைத் தயாரிக்கும் செயன்முறையின் போது இயற்கை வாயுவின் பிரதான மாசு பொருளான ஐதரசன் சல்பைடு அகற்றப்படுகின்றது. இவ்வாறு அகற்றப்படும் H2S ஐ நாக ஒக்சைட்டுடன் தாக்கமடையச் செய்து நாக சல்பைடை உருவாக்கலாம்.
ஆய்வு கூடத்தில் நாக-கந்தகக் கலவையை நெருப்புச் சுவாலையால் நேரடியாகச் சூடாக்குவதால் நாக சல்பைடை உருவாக்கலாம். நாகத்தின் உப்புக்களைக் கொண்ட நீர்க்கரைசலின் மீது சல்பைடு அயன்களை உருவாக்கக்கூடிய ஐதரசன் சல்பைடு போன்ற வாயுவைப் பாய்ச்சுவதால் நாக சல்பைடை வீழ்படிவாகப் பெற்றுக்கொள்ளலாம் (ஏனெனில் நாக சல்பைடு நீரில் அவ்வளவாகக் கரையாது).
|
Portal di Ensiklopedia Dunia