துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு (Zinc acetylacetonate) என்பது Zn(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல்சேர்மமாகும். துத்தநாகத்தின் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மமாகக் கருதப்படும் இச்சேர்மம் ஒரு முப்படி சேர்மமாகவும் (Zn3(acac)6) வகைப்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு Zn அயனியும் ஐந்து ஆக்சிசன் அணுக்களால் சிதைந்த முக்கோண இருநாற்கூம்பு அமைப்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது.[5]
துத்தநாக அசிட்டைலசிட்டோனேட் தண்ணீரில் சிறிதளவாகக் கரையக்கூடிய ஒரு படிகமாகும்.[1]பதங்கமாதல் மூலம் இதன் ஒருமப் படிகங்கள் உருவாகின்றன. இவை ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பிலும் C2/c (எண். 15) என்ற இடக்குழுவிலும் காணப்படுகின்றன. [6] பதங்கமாதல் மூலம் இதன் முப்படி படிகங்களும் உருவாகின்றன.[2] இவை ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பிலும் C2 (எண் 5) என்ற இடக்குழுவிலும் காணப்படுகின்றன.ref>H. Montgomery, E. C. Lingafelter (1963). "The crystal structure of monoaquobisacetylacetonatozinc". Acta Crystallographica16 (8): 748–752. doi:10.1107/S0365110X6300195X.</ref> இதன் ஒற்றைநீரேற்று மற்றும் இருநீரேற்று ஆகியவற்றின் கட்டமைப்புகளும் அறியப்படுகின்றன.[7]
வினைகள்
துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு நீரேற்று காந்த (Zn,Fe)Fe2O4 சுருள்கள் தயாரிப்பிலும்[8] துத்தநாக ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[9] மேலும் இது கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]