எதிர்மின் அயனி துத்தநாக ஆக்சைடுகள் அல்லது ஐதராக்சைடுகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுவாக சோடியம் சிங்கேட்டுகள் என அறியப்படுகின்றன. இவற்றின் பயன்பாடுகளை முன்னிறுத்தி நோக்கும்போது சரியான மூலக்கூற்று வாய்ப்பாடு என்பது அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. அதே போலவே நீரிய சிங்கேட்டு கரைசல்களும்கலவைகளைக் கொண்டிருக்கின்றன [1].
ஐதராக்சி சிங்கேட்டுகள்
துத்தநாகம், துத்தநாக ஐதராக்சைடு அல்லது துத்தநாக ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடின் நீரிய கரைசலுடன் சேர்த்து சோடியம் சிங்கேட்டு கரைசல் தயாரிக்கப்படுகிறது [2]. சிக்கலான இச்செயல் முறைக்குரிய எளிய சமன்பாடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ZnO + H2O + 2 NaOH → Na2Zn(OH)4
Zn + 2 H2O + 2 NaOH → Na2Zn(OH)4 + H2
இத்தகைய கரைசல்களிலிருந்து Zn(OH)42−, Zn2(OH)62−, மற்றும் Zn(OH)64−.போன்ற எதிர்மின் அயனி உப்புகளை நாம் படிகமாக்க இயலும்.
Na2Zn(OH)4 சேர்மத்தில் நான்முக சிங்கேட்டு அயனியும் எண்முக சோடியம் நேர்மின் அயனியும் இடம் பெற்றுள்ளன [3]
Sr2Zn(OH)6 உப்பில் துத்தநாகம் எண்முக ஒருங்கினைப்புக் கோளத்தில் தோற்றமளிக்கிறது.
ஆக்சோசிங்கேட்டுகள்
Na2ZnO2,[4] Na2Zn2O3,[5] Na10Zn4O9.[6] போன்ற தொடர்புடைய ஆக்சைடுகளும் அறியப்படுகின்றன.
மேற்கோள்கள்
↑Glenn O. Mallory, Juan B. Hajdu, (1990), Electroless Plating: Fundamentals and Applications, American Electroplaters and Surface Finishers Society, , William Andrew Inc., பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-936569-07-7
↑Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. ISBN0080379419.
↑Ein neues Natriumzinkat, D. Trinschek, M. Jansen: Na2ZnO2, Z. Naturforschung 51b (1996) 711-4
↑Eine neue Modifikation von Na2Zn2O3, D. Trinschek, M. Jansen: , Z. Naturforschung 51b, (1996), 917-21
↑Ein neues Oxozinkat mit trigonal-planar koordiniertem Zink, D. Trinschek, M. Jansen: Na10Zn4O9, Zeitschrift für anorganische und allgemeine Chemie volume 622 (1996), pp. 245-50