துத்தநாக பெர்குளோரேட்டு
துத்தநாக பெர்குளோரேட்டு (Zinc perchlorate) என்பது Zn(ClO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். அறுநீரேற்றாக இது உருவாகிறது.[1][2] தயாரிப்புதுத்தநாக ஆக்சைடு அல்லது துத்தநாக கார்பனேட்டை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்தால் துத்தநாக பெர்குளோரேட்டு உருவாகும்:[3] வேதிப்பண்புகள்உயர் வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது இச்சேர்மம் சிதைவடைகிறது. துத்தநாக பெர்குளோரேட்டு மிகவும் வலுவாக சூடேற்றப்பட்டால் வெடிக்க நேரிடலாம். தாமிர பெர்குளோரேட்டு மற்றும் காரீய பெர்குளோரேட்டு போன்ற மற்ற பெர்குளோரேட்டுகளைப் போலவே, துத்தநாக பெர்குளோரேட்டுகளும் ஈரமுறிஞ்சுகின்றன. 8-அமினோகுயினோலின், முக்கார்போ ஐதரசைடு மற்றும் டெட்ராபீனைலெத்திலீன் டெட்ராடிரையசோல் போன்ற ஈந்தணைவிகளுடன் துத்தநாக பெர்குளோரேட்டு ஒருங்கிணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது.[4] இயற்பியல் பண்புகள்Zn(ClO4)2·6H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட அறுநீரேற்றாக துத்தநாக பெர்குளோரேட்டு உருவாகிறது. துத்தநாக பெர்குளோரேட்டு ஒரு நீருறிஞ்சும் திண்மப் பொருளாக நிறமற்றும், மணமற்றும் காணப்படுகிறது. நீரில் கரைகிறது. குறைந்த எடையுள்ள ஆல்ககால்களை உருவாக்குகிறது.[5][6] பயன்கள்துத்தநாக பெர்குளோரேட்டு ஒரு வினையூக்கியாகவும் ஆக்சிசனேற்றியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia