நமேரி தேசியப் பூங்கா
இந்தியாவின் அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் தேஸ்பூரிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு தேசிய பூங்கா நமேரி தேசிய பூங்கா (Nameri National Park) ஆகும். இதன் அருகிலுள்ள கிராமம் சரிதுவார், இது இங்கிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது.[1] நமேரி தனது வடக்கு எல்லையை அருணாச்சல பிரதேசத்தின் பாகுய் வனவிலங்கு சரணாலயத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இங்கு 1000 சதுர கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் இவை பகிர்ந்து கொள்கின்றன. இதில் நமேரியின் மொத்த பரப்பளவு 200 கி.மீ. 2 ஆகும்.[2] 1999-2000ஆம் ஆண்டில் நமேரி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது மனாசு புலிகள் காப்பகத்திற்குப் பிறகு அசாமின் 2வது புலிகள் காப்பகமாகும். இது 2 முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது: நமேரி தேசிய பூங்கா & சோனாய்- ரூபை வனவிலங்கு சரணாலயம் (நமேரி புலி ரிசர்வ் சேட்டிலைட் மூலம்). ஜியா-போரோலி நதி நமேரியின் உயிர்நாடியாகும். இது பூங்காவின் தெற்கு எல்லையில் வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை பாய்கிறது. கிழக்குப் பகுதியில், போர்-டிகோராய் நதி ஜியா-போரோலி நதியின் துணை, வடகிழக்கு முதல் தென்மேற்கு வரை தெற்கு எல்லையில் பாய்கிறது. நதிகள்முக்கிய நதிகளாக ஜியா- போரோலி மற்றும் போர் டிகோராய் உள்ளன. இந்த இரண்டு நதிகளின் பிற துணை ஆறுகள்: டிஜி, தினாய், நமேரி, காரி, மேல் திகிரி ஆகியன. இவை அருணாச்சல பிரதேசத்தில் இமயமலையில் தோன்றி பக்கே டிஆர் மற்றும் நமேரி டிஆர் வழியாகப் பாய்கின்றன. சொற்பிறப்பியல்அக்டோபர் 17, 1978 அன்று இந்த பூங்கா ஒரு வனக் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இது செப்டம்பர் 18, 1985 அன்று 137 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நமேரி சரணாலயமாக அமைக்கப்பட்டது. நாது வனப்பகுதியின் ஒரு பகுதியாக உள்ளது. வனக்காப்பகமாக அறிவிக்கப்படும் வரை நமேரி தேசிய பூங்காவில் மரங்கள் வெட்டப்பட்டன. நவம்பர் 15, 1998 அன்று மேலும் 75 கி.மீ 2 தேசிய பூங்காவாக அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டபோது சேர்க்கப்பட்டது. அசாமின் ஜியா போரோலி நதி ஆங்கிலேயக் காலத்திலிருந்தே தங்க பெளி மீனைத் தூண்டிலிட்டுப் பிடித்தலுக்குப் புகழ்பெற்றது.[3] தூண்டி மீன்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக 2011ஆம் ஆண்டில் இந்த புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்டது. ![]() தாவரங்கள்நமேரியின் தாவர வகை பகுதி பசுமையான மூங்கில் பிரேக்குகள் கொண்ட ஈரமான இலையுதிர் காடுகள் மற்றும் ஆறுகளில் திறந்த புல்வெளியின் குறுகிய கீற்றுகள் இங்கே காணப்படுகின்றன. காடுகள் மேலொட்டிகள், லியானாக்கள் மற்றும் படர்கொடிகள் மற்றும் மூங்கில் நிறைந்து காணப்படுகிறது.[2] இந்த காட்டில் 600க்கும் மேற்பட்ட தாவரச் சிற்றினங்கள் உள்ளன. சில குறிப்பிடத்தக்க இனங்களாக மெலினா, அர்போரியா, சண்பகம்-அமோர வாலிச்சி, சுக்கராசியா டேபுலாரிசு, கதலி, உரிம் போமா, பெலூ, ஆகாரு, ருத்ராட்ச, போஜோலோகியா, ஹட்டிபோலியா அக்கேகன், ஹோலக், நாகமரம் உள்ளன. டென்ட்ரோபியம், சிம்பிடியம் மற்றும் சைப்ரிபீடியோயிடே போன்ற மல்லிகைகளுக்கு இது தாயகமாக உள்ளது.[3] ![]() விலங்குகள்இது யானை காப்பகமாகவும் யானைகள் மிகுந்த பகுதியாகவும் கருதப்படுகிறது. இங்குப் புலி, சிறுத்தை, சதுப்புநில மான், கடமான், செந்நாய் (ஆசியக் காட்டு நாய்), இந்திய காட்டெருது, படைச்சிறுத்தை, சிறுத்தைப் பூனை, கேளையாடு, காட்டுப்பன்றி, தேன் கரடி, பளிங்குப் பூனை, இமயமலை கருப்புக் கரடி, மூடிய மந்தி மற்றும் இந்திய மலை அணில் உள்ளிட்ட பல விலங்குகளுக்கு உறைவிடமாக உள்ளது. ![]() ![]() ![]() 300க்கும் மேற்பட்ட இனங்கள் காணப்படும் இப்பூங்கா பறவைக் கண்காணிப்பாளரின் சொர்க்கம் ஆகும். வெள்ளை சிறகுகள் கொண்ட மர வாத்து, மலை இருவாட்சி, மாலை அணிந்த இருவாச்சி, ரூஃபஸ் கழுத்து இருவாச்சி, கரும் நாரை, ஐபிஸ்பில், காட்டுப் பஞ்சுருட்டான், சிலம்பன்கள், உப்புக்கொத்திகள் உள்ளிட்ட பல பறவைகள் நமேரியை தங்கள் வீடாக ஆக்குகின்றன.[4] நமேரியில் பறவை வளர்ப்பு![]() ![]() ஆபாசின் பறவையான வெள்ளை-சிறகுகள் கொண்ட வாத்தின் (அசார்கார்னிசு ஸ்கூட்டுலாட்டா) சிறந்த பார்வைக்குரிய இடம் நமேரி ஆகும். இது அசாமின் மாநில பறவையாகும். ஐபிஸ்பில் மற்றும் மெர்கன்சர் ஆகியவை இரண்டு குளிர்காலங்களில் இடம்பெயரும் பறவைகளாக இப்பூங்காவிற்கு வருகின்றன. இந்த பூங்காவில் 2005ஆம் ஆண்டில் 374 (முந்நூற்று எழுபத்து நான்கு) பறவைகள் இருப்பதைத் திரு. மான் பருவா மற்றும் திரு பங்கஜ் சர்மா ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.[5] மோதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்நமேரி சில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. அவற்றுள் ஒன்று, சோனித்பூர் பகுதியில் தொடர்ந்து உத்தியோக பூர்வ மரங்கள் அகற்றுதல். சுமார் 3000 கால்நடைகள் காடுகளில் மேய்வதால் மனித/விலங்கு மோதல் நமேரிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.[4] மற்ற மனித/விலங்கு மோதல்கள் நமேரியில் உள்ள யானைகளால் ஏற்படுகின்றன. யானை இறப்புக்குப் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2001ல் 18 யானை இறப்புகள் நிகழ்ந்தன.[6] இது இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ஏனெனில் வேட்டையாடுபவர்கள் இறக்கைகளுக்காக மதிப்புமிக்க பறவைகளையும் வேட்டையாடுகிறார்கள். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia