ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா
ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா (Pin Valley National Park) வட இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள லாகெல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். வரலாறுஇது செங்குத்தான பள்ளத்தாக்கு, தற்போது அங்கு புத்த மற்றும் திபெத்திய கலாசாரம் பின்பற்றப்படுகிறது. இப்பகுதியில் திபெத்திய பௌத்த மதத் தாக்கங்கள் நிறைய காணப்படுகின்றன. இதற்கு ஆதாரங்களாக அங்கு கட்டப்பட்டுள்ள உள்ள கட்டிடக்கலை உள்ளது. அவை மடாலயங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகும். இந்தியா அரசால், பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா 675 சதுர கி. மீ. பரப்பளவில் 1958-ல் நிறுவப்பட்டது.[1] நிலவியல்இப்பூங்காவானது, இமாலய பிராந்தியத்தின் குளிர் உயிர்கோள பாலைவனப் பகுதியினுள்ளாக, ஸ்பிதி பள்ளத்தாக்கின் பாலைவன வாழிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2] திபெத்திய எல்லைக்கு அருகே உள்ள டாங்கர் கோம்பாவிற்கு தெற்கே வரை பரவியுள்ளது. முன்னதாக பிரிந்து அமைந்திருந்த லாஹௌல் மற்றும் ஸ்பிட்டி ஆகிய மாவட்டங்களை பிாிக்கும் எல்லைப்பகுதியாக இந்த பூங்கா அமைந்துள்ளது. கா டோக்ரிக்கு அருகில் இந்த பூங்காவின் உயரம் சுமார் 3,500 மீட்டர் (11,500 அடி) முதல் 6,000 மீட்டருக்கும் (20,000 அடி) வரையிலான உயரத்தில் உள்ளது, இதுதான் இப்பூங்காவின் மிக உயரமான பகுதியாகும். சூழியல்இங்கு பளுவேற்றப்பட்ட பனிப்பொழிவுகளுடன் கண்டுபிடிக்கப்படாத மிக உயரமான பகுதிகளையும் சாிவுகளையும் கொண்டது. இந்த பூங்காவானது, இயற்கை வாழிடமாக உள்ளது. இங்கு அருகிவரும் உயிரினங்களான, பனிச் சிறுத்தை[3] மற்றும் சைபீரியன் ஐபெக்ஸ் உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளன. தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள்பூங்காவின் உயரமான மற்றும் மிக அதிக வெப்பநிலை காரணமாக, தாவரங்கள் அடர்த்தியற்று காணப்படுகிறது. பெரும்பாலும் அல்பின் மரங்கள் மற்றும் இமாலய சிடார் மரங்களும் (சிடரஸ் தியோடாரா) உள்ளன. கோடை காலத்தில், அாியவகை பறவைகள் இனங்கள் இப்பூங்காவை வளம் ஆக்குகின்றன. அவையாவன, இமாலய பனிக்காகம், சக்கர் கௌதாரி, பனி கௌதாரி மற்றும் பனிக்குருவி போன்றவையாகும். மூலிகைத் தாவரங்கள்பூங்காவின் அல்பின் வாழ்விடங்களில் சில தாவரங்கள் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இருபத்தி இரண்டு அரிய மற்றும் அருகிவரும் மருத்துவ தாவர இனங்கள், ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்காவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அவை 10 வேறுபட்ட வாழ்விட வகைகளில் பரவிக் காணப்படுகிறது.[4] அக்னீபியம் ரவுண்டிபொலியம், அர்ன்பியா யூரோரோமா, எபெதேரா ஜெரார்டியானா, ஃபுலூ ஜேசெக்கானா, ஹைஸ்ஸியஸ்மஸ் நைஜர் (Aconitum rotundifolium, Arnebia euchroma, Ephedra gerardiana, Ferula jaeschkeana, Hyoscymus niger) ஆகிய அருகிவரும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்கள் இத் தேசிய பூங்காவின் உள்ளேயும், பூங்காச் சுற்றிலும் காணப்படுகின்றன.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia