நான்சி சுக்ரி
நான்சி சுக்ரி (மலாய்: Nancy Shukri; ஜாவி: ننسي بنت شكري ஆங்கிலம்: Nancy Shukri) (பிறப்பு: 5 ஆகத்து 1961) என்பவர் சரவாக் கட்சிகள் கூட்டணி (Gabungan Parti Sarawak) (GPS) எனும் சரவாக் அரசியல் கூட்டணியில் உள்ள ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சியை (Parti Pesaka Bumiputera Bersatu) (PBB) சார்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் டிசம்பர் 2022 மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகீம் தலைமையிலான பாக்காத்தான் ஹரப்பான் (Pakatan Harapan) (PH) நிர்வாகத்தில் மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சராக (Minister of Women, Family and Community Development) பணியாற்றினார். நவம்பர் 2022 முதல் சரவாக் சாந்துபோங் மக்களவைத் தொகுதிக்கான மக்களவை உறுப்பினராக உள்ளார். மலேசியப் பொதுத் தேர்தல், 2022-இல், 52,762 பதிவு பெற்ற வாக்குகளில் 43,739 வாக்குகள் பெற்று 74.66% பெரும்பான்மையில் வெற்றி பெற்று மலேசிய தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனை படைத்துள்ளார். பொதுமுன்னாள் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் (Ismail Sabri Yaakob) பாரிசான் நேசனல் (Barisan Nasional) நிர்வாகத்தில்; ஆகத்து 2021 முதல் நவம்பர் 2022-இல் நிர்வாகம் வீழ்ச்சியடையும் வரையில்; இரண்டாவது முறையாக மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சராகவும் பணியாற்றினார். மார்ச் 2020 முதல் ஆகத்து 2021 வரை முன்னாள் மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) அவர்களின் பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) நிர்வாகத்தில் முதல் முறையாக மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சராக (Minister of Tourism, Arts and Culture) பணியாற்றினார்.[1] இவர் மே 2013 முதல் மே 2018 வரை முன்னாள் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக்கின் பாரிசான் நேசனல் நிர்வாகத்தில் மலேசியப் பிரதமர் துறை அமைச்சராகவும், மலேசிய தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் அமைச்சராகவும் பணியாற்றினார். அரசியல் வாழ்க்கை2008-ஆம் ஆண்டு மலேசிய பொதுத் தேர்தலில் சரவாக் மாநிலத்தில் உள்ள பத்தாங் சாடோங் (Batang Sadong) எனும் கிராமப்புற பழமைவாத தொகுதியில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டார்.[2] 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் தன் பத்தாங் சாடோங் தொகுதியை வெற்றிகரமாகத் தற்காத்துக் கொண்டார். அதன் பிறகு, அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அறிவித்த அமைச்சரவையில் இவர் மலேசியப் பிரதமர் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[3] தனிப்பட்ட வாழ்க்கைநான்சி சுக்ரி, 1961 ஆகத்து 5-ஆம் தேதி சரவாக், கூச்சிங்கில் பிறந்தார். பதினொரு உடன்பிறப்புகளில் பத்தாவது ஆவர். தந்தையாரின் பெயர் சுக்ரி மகிதி (Shukri Mahidi). தாயாரின் பெயர் பீபி மெக்பெர்சன் (Bibi McPherson). தந்தையின் வழியாக மலாய் மற்றும் மெலனாவு (Melanau) வம்சாவளியைக் கொண்டிருக்கிறார். தாயாரின் வழியாக இசுகாட்டிஷ் (Scottish), இபான் மற்றும் சீன வம்சாவளியைக் கொண்டிருக்கிறார்.[4][5] இவருக்குத் திருமணமாகி, மூன்று குழந்தைகளுடன் தற்போது சரவாக்கின் கூச்சிங்கில் வசித்து வருகிறார். தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia