சாந்துபோங் மக்களவைத் தொகுதி
சாந்துபோங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Santubong; ஆங்கிலம்: Santubong Federal Constituency; சீனம்: 山都望联邦选区) என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவு; இலுண்டு மாவட்டம்; கூச்சிங் மாவட்டம் ஆகிய 2 மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P193) ஆகும்.[5] சாந்துபோங் மக்களவைத் தொகுதி 1968-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1969-ஆம் ஆண்டில் இருந்து சாந்துபோங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] கூச்சிங் மாவட்டம்கூச்சிங் மாவட்டம் என்பது மலேசியா, சரவாக், கூச்சிங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும். இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜேம்சு புரூக்1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் நடந்த ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கூச்சிங் நகரம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுத்தார். சாந்துபோங் மக்களவைத் தொகுதிசாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[7] சரவாக் பூமிபுத்ரா (10.4%) மலாயர் (81.8%) சீனர் (7.5%) இதர இனத்தவர் (0.3%)
சாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022) ஆண் (49.54%) பெண் (50.46%)
சாந்துபோங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022) 18-20 (8.21%) 21-29 (25.1%) 30-39 (21.72%) 40-49 (16.93%) 50-59 (13.77%) 60-69 (8.85%) 70-79 (4.02%) 80-89 (1.13%) + 90 (0.26%)
தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia