நியோடிமியம் ஆக்சிபுளோரைடு

நியோடிமியம் ஆக்சிபுளோரைடு
Neodymium oxyfluoride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புளோரோ ஐப்போபுளோரைட்டு; நியோடிமியம்
வேறு பெயர்கள்
நியோடிமியம் ஆக்சைடு புளோரைடு
இனங்காட்டிகள்
13816-43-8 Y
InChI
  • InChI=1S/FH.Nd.O/h1H;;/q;+3;-2/p-1
    Key: FXNFEPRSIMVHIW-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
  • [F-].[O-2].[Nd+3]
பண்புகள்
NdOF
வாய்ப்பாட்டு எடை 179.239 கி/மோல்
தோற்றம் ஊதா நிறத் தூள்
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், சாய்சதுரப்பிழம்புரு,முக்கோணம்
புறவெளித் தொகுதி P4/nmm
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

நியோடிமியம் ஆக்சிபுளோரைடு (Neodymium oxyfluoride) என்பது NdOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நியோடிமியம், ஆக்சிசன், புளோரின் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. எர்பியம் ஆக்சைடு புளோரைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[1]

தயாரிப்பு

நியோடிமியம்(III) ஆக்சைடுடன் நியோடிமியம் புளோரைடைச் சேர்த்து 6 மெகா பாசுக்கல் அழுத்தத்தில் வினைபுரியச் செய்தால் நியோடிமியம் ஆக்சிபுளோரைடு சேர்மத்தை தயாரிக்க முடியும்.[2]

Nd2O3 + NdF3 -> 3NdOF

இயற்பியல் பண்புகள்

நியோடிமியம் ஆக்சிபுளோரைடு மூன்று தனித்துவமான படிக அமைப்புகளை வெளிப்படுத்துகிறது. அனைத்தும் கனசதுர புளோரைட்டு ஏற்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில், இரண்டு விகிதவியல்சார்ந்த கலவை NdOF உடன் ஒத்திருக்கிறது: அவை கனசதுர மற்றும் சாய்சதுரப்பிழம்புரு அமைப்புகளாகும். மூன்றாவது அமைப்பு, நாற்கோண வடிவமாகும். இது NdOF உடன் ஒப்பிடும்போது புளோரின் அதிகப்படியான நிலைமைகளின் கீழ் வெளிப்படுகிறது மற்றும் பல்வேறு அளவு கலவைகளில் உள்ளது.[3]

பயன்கள்

நியோடிமியம் ஆக்சிபுளோரைடு இதன் தனித்துவமான அமைப்பு காரணமாக எதிர்மின் அயனி திட மின்பகுளிகள், ஒளிரும் பொருட்கள், வினையூக்கப் பொருள் மற்றும் காந்தப் பொருட்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆர்வத்தை ஈர்த்துள்ளது. அருமண் நேர்மின் அயனிகளின் நன்மை பயக்கும் பண்புகளை புளோரைடு (F⁻) மற்றும் ஆக்சைடு (O²⁻) எதிர்மின் அயனிகளுடன் இணைக்கிறது.[4]

மேற்கோள்கள்

  1. "Neodymium Oxyfluoride | CAS 13816-43-8 | NdOF | AMERICAN ELEMENTS ®" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 5 July 2025.
  2. Takeda, Osamu; Nakano, Kiyotaka; Kobayashi, Fumiyoshi; Lu, Xin; Sato, Yuzuru; Zhu, Hogmin (1 December 2022). "Solubilities of RE2O3 in REF3-LiF" (in en). Journal of Sustainable Metallurgy 8 (4): 1498–1508. doi:10.1007/s40831-022-00617-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:2199-3831. https://link.springer.com/article/10.1007/s40831-022-00617-6. பார்த்த நாள்: 5 July 2025. 
  3. Fergus, Jeffrey W. (1 November 1996). "Crystal chemistry of neodymium oxyfluoride". Materials Research Bulletin 31 (11): 1317–1323. doi:10.1016/0025-5408(96)00138-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-5408. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0025540896001389. பார்த்த நாள்: 5 July 2025. 
  4. Yang, Yusheng; Wang, Tuoyao; Zhao, Ran; Zhang, Shuyan; Zhao, Zengwu (1 December 2022). "Molten salt synthesis of neodynium oxyfluoride in various fluoride media with different fluoride ion activities". Journal of Rare Earths 40 (12): 1935–1944. doi:10.1016/j.jre.2022.01.018. பன்னாட்டுத் தர தொடர் எண்:1002-0721. Bibcode: 2022JREar..40.1935Y. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S1002072122000266. பார்த்த நாள்: 5 July 2025. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya