பாதரசம்(II) சிடீயரேட்டு (Mercury(II) stearate) C36H70HgO4
என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் உலோக-கரிமச் சேர்மமாகும்.[1] ஓர் உலோக சோப்பாக அதாவது ஒரு கொழுப்பு அமிலத்தினுடைய உலோக வழிப்பெறுதி என பாதரசம்(II) சிடீயரேட்டு வகைப்படுத்தப்படுகிறது.[2] உள்ளிழுத்தல், உட்செலுத்துதல் மற்றும் தோல் உறிஞ்சுதல் ஆகியன நேரிட்டால் இச்சேர்மம் மிகவும் நச்சுத்தன்மையுடையது.
தயாரிப்பு
பாதரசம்(II) குளோரைடுடன் சோடியம் சிடீயரேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்யும்போது பரிமாற்ற வினையில் பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.
மெர்குரியசு ஆக்சைடை சிடீயரிக் அமிலத்துடன் சேர்த்து சூடுபடுத்தினாலும் பாதரசம்(II) சிடீயரேட்டு கிடைக்கும்.[3]
இயற்பியல் பண்புகள்
மஞ்சள் நிற மெழுகுப் பொருளாக பாதரசம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.[4]
கொழுப்பு எண்ணெய்களில் கரையும். நீர் அல்லது ஆல்ககாலில் கரையாது.[5]
பயன்கள்
பாதரசம்(II) சிடீயரேட்டு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது.[5]
பீங்கான் உற்பத்தியில் ஒரு நெகிழியாக்கியாகப் பயன்படுகிறது.