பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி
பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி (Bis(trimethylsilyl)mercury) என்பது (CH3)3-Si-Hg-Si-(CH3)3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதை பிசு(மும்மெத்தில்சிலில்)பாதரசம் என்ற பெயராலும் அழைக்கலாம். தயாரிப்பு1963 ஆம் ஆண்டு வைபெர்கு மற்றும் குழுவினர் முதன்முதலில் இச்சேர்மத்தை தயாரித்தனர். டிரைமெத்தில்சிலில் புரோமைடுடன் சோடியம் இரசக்கலவையை வினைபுரியச் செய்து இவர்கள் பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரியைத் தயாரித்தனர்[1].
வினைகள்100-160 ° செல்சியசு வெப்பநிலைக்கு பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரியை தொடர்ச்சியாக சூடுபடுத்தும்போது அல்லது ஓர் ஈத்தர் கரைசலாக ஒளியில் படநேரும்போது இது எக்சாமெத்தில்டைசிலேனாக சிதைவடைகிறது :[1]. TMS2Hg → (CH3)3Si-Si(CH3)3 + Hg பிசு(டிரைமெத்தில்சிலில்)மெர்க்குரி சேர்மம் ஐதரசன் குளோரைடுடன் வினைபுரிந்தால் டிரைமெத்தில்சிலேனும் டிரைமெத்தில்சிலில்குளோரைடும் உருவாகின்றன :[1]. TMS2Hg + HCl → TMSH + TMSCl + Hg மேற்கோள்கள்
மேலும் வாசிக்க
|
Portal di Ensiklopedia Dunia