பாதரச(II) புரோமைடு
பாதரச(II) புரோமைடு (Mercury(II) bromide, அல்லது mercuric bromide, மெர்க்குரிக் புரோமைடு) என்பது HgBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் படிகத்தின்மமாக காணப்படும் இச்சேர்மம் பாதரசம் மற்றும் புரோமின் தனிமங்கள் சேர்ந்து உருவாகிறது. பாதரச(II) குளோரைடு போல் இதுவும் நச்சுத்தன்மை மிகுந்து காணப்படுகிறது. தயாரிப்பு
வினைகள்கோய்நிக்சு – கநார் வினையில் பாதரச(II) புரோமைடு ஒரு வினையாக்கியாகப் பயன்படுகிறது. இவ்வினையில் கார்போவைதரேட்டுகள் மீது கிளைகோசைடு பிணைவுகளை உருவாக்குகிறது[1][2] மருந்தியல் குறிப்பேடு பரிந்துரை செய்துள்ளபடி ஆர்சனிக்கின் இருப்பை அறிந்துகொள்ள பாதரச(II) புரோமைடு பயன்படுத்தப்படுகிறது[3] கொடுக்கப்பட்டுள்ள மாதிரியில் ஆர்சனிக் இருந்தால் அது ஐதரசன் வாயுவுடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டு ஆர்சீன் வாயுவாக மாற்றப்படுகிறது. ஆர்சீன் பாதரச(II) புரோமைடுடன் பின்வருமாறு வினைபுரிகிறது.:[4] AsH3 + 3HgBr2 → As(HgBr)3 + 3HBr பாதரச(II) புரோமைடு மஞ்சள், பழுப்பு அல்லது கருப்பாக மாறினால் அம்மாதிரியில் ஆர்சனிக் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது.[5] உயர் வெப்பநிலையில் பாதரச(II) புரோமைடு தனிமநிலை இண்டியத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது.[6] பொட்டாசியத்துடன் சேர்ந்து அதிர்ச்சி உணர் வெடிபொருள் கலவையாக உருவாகிறது. [7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia