பாஸ்பரஸ் பென்டாக்சைடு
பாஸ்பரஸ் பென்டாக்சைடு (Phosphorus pentoxide) என்பது ஓர் வேதிச்சேர்மம். இதன் வேதி மூலக்கூறு வாய்ப்பாடு P4O10 ஆகும். ஆனால் இதன் பொதுப்பெயர் P2O5 இல் இருந்து பெறப்பட்டது. இந்த வெண்ணிறப்படிக திடச்சேர்மமானது பாஸ்போரிக் அமிலத்தின் நீரிலி ஆகும். இது ஒரு சக்திவாய்ந்த உலரத்தும் மற்றும் நீரிழக்கச்செய்யும் வினைக் காரணியாக செயல்படுகின்றது. அமைப்புபாசுபரசு பென்டாக்சைடு குறைந்தது நான்கு வடிவங்களில் படிகமாகிறது. இவற்றில் நன்கறியப்பட்ட ஒன்று மெட்டாநிலைத்தன்மை கொண்ட வடிவம் ஆகும்.[1] (படத்தில் காட்டப்பட்டுள்ளது), இந்த வடிவமானது P4O10 மூலக்கூறுகளால் ஆனது. பலவீனமான வான்டர்வால்ஸ் விசையானது மூலக்கூறுகளை ஒரு அறுங்கோணப் படிகக்கூட்டில் இணைத்து வைத்திருக்கிறது. (இருப்பினும், மூலக்கூறுகளுக்கிடையேயான உச்ச சீர்தன்மை இருந்தபோதிலும், இந்தப் படிகக்கூானது நெருக்கமான ஒன்றாக இல்லை.[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia