சமாரியம் பாசுபைடு
சமாரியம் பாசுபைடு (Samarium phosphide) என்பது SmP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். சமாரியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [1][2][3] தயாரிப்புசமாரியத்தையும் பாசுபரசையும் சேர்த்து சூடுபடுத்தினால் சமாரியம் பாசுபைடு உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்சமாரியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் அலகு அளவு a = 0.5760 நானோமீட்டர், Z = 4, என்ற அளபுருக்களுடன் படிகங்களாக உருவாகிறது. இப்படிகத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது. [4] 1315 -2020 பாகை செல்சியசு வெப்பநிலையில் இச்சேர்மம் தோன்றுகிறது. [5] வேதிப் பண்புகள்சமாரியம் பாசுபைடு நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து எளிதில் சிதைவடைகிறது. [6] பயன்கள்உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் சமாரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia