இட்டெர்பியம் பாசுபைடு
இட்டெர்பியம் பாசுபைடு (Ytterbium phosphide) என்பது YbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. [1] இட்டெர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இட்டெர்பியத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். [2][3] தயாரிப்புஇட்டெர்பியமும் பாசுபீனும் திரவ அமோனியாவில் வினைபுரிந்து Yb(PH2)2•5NH3 என்ற அணைவுச் சேர்மம் உருவாகிறது. இதை இட்டெர்பியம் பாசுபைடாக சிதைக்க முடியும்:[4] இயற்பியல் பண்புகள்550 பாகை செல்சியசு வெப்பநிலையில் இட்டெர்பியம் பாசுபைடு சிதைவடைகிறது. ஐதரோகுளோரிக் அமிலம், இராச திராவகம், நைட்ரிக் அமிலம் போன்றவற்றில் இது கரையும். இட்டெர்பியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது. [5] பயன்கள்உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia