கே. ஆர். மல்கானி
கேவல்ராம் ரத்தன்லால் மல்கானி (Kewalram Ratanmal Malkani) (19 நவம்பர் 1921 – 27 அக்டோபர் 2003) பத்திரிக்கையாளர் மற்றும் பாரதிய சனதா கட்சியின் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 முதல் 1994 முடிய பாரதிய சனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராகவும், 1994 முதல் 2000 முடிய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். பின்னர் இறக்கும் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 31 சூலை 2002 முதல் 27 அக்டோபர் 2003 முடிய பணியாற்றியவர். இவர் ராஷ்டிரிய சுயம் சங்கத்தின் வெளியீடான பஞ்சஜன்யா மற்றும் ஆர்கனைசர் இதழ்களின் தலைமை ஆசிரியராக ஒரே நேரத்தில் பணியாற்றியவர்.[1] வாழ்க்கைபிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, இவர் தற்கால பாகிஸ்தான் நாட்டின் ஐதராபாத் நகரத்தில் 19 நவம்பர் 1921 அன்று பிறந்தார். இவர் ஐதராபாத் டி. ஜி. தேசியக் கல்லூரி மற்றும் பெர்க்குசன் கல்லூரி, புணேவில் பொருளாதாரம் மற்றும் சமுகவியல் படிப்பை படித்தவர். [2] 25 சூன் 1975 அன்று நள்ளிரவில் இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவித்த இரண்டு மணி நேரத்திற்குள் கைதான முதல் மனிதர் கே. ஆர். மல்கானி ஆவார். 1980-இல் பாரதிய ஜனதா கட்சி நிறுவனத் தலைவர்களில் ஒருவர் கே. ஆர். மல்கானியும் ஒருவர் ஆவார். இவர் 1991 முதல் 1994 முடிய பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய துணைத் தலைவராகவும், 1994 முதல் 2000 முடிய மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். பின்னர் இறக்கும் வரை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக 31 சூலை 2002 முதல் 27 அக்டோபர் 2003 முடிய பணியாற்றியவர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: கே. ஆர். மல்கானி |
Portal di Ensiklopedia Dunia