புரூணை சுல்தானகம் அல்லது புரூணை (மலாய் மொழி: Kesultanan Brunei; ஆங்கிலம்: Sultanate of Brunei(Brunei); ஜாவி: كسلطانن بروني ) என்பது 1363-ஆம் ஆண்டில், தென்கிழக்கு ஆசியா, போர்னியோ வடக்கு கடற்கரையில் புரூணை நிலப்பகுதியை மையமாகக் கொண்டிருந்த ஓர் அரசு ஆகும்.
17-ஆம்; - 18-ஆம் நூற்றாண்டுகளில் இந்த அரசு வீழ்ச்சி அடையத் தொடங்கியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய பாதுகாப்பின் கீழ் வந்தது.[7]
பொது
சமகால வரலாற்றுச் சான்றுகளின் வரையறுக்கப்பட்ட சான்றுக் கூறுகள்; தொடக்கக்கால புரூணை சுல்தானகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதில் சவாலாக அமைகின்றன. அதற்கான சான்றுகளை வழங்குவதற்கு உள்ளூர் அல்லது பூர்வீகச் சான்றுகள் எதுவும் இல்லை.
இதன் விளைவாக, தொடக்கக்காலப் புரூணை சுல்தானகத்தின் வரலாற்றைக் கட்டமைக்க சீன நூல்களை மேற்கோள் காண வேண்டியுள்ளது. சீன நூல்களில் உள்ள போனி(Boni) எனும் இடப் பெயரைக் கொண்ட சொற்கள்; பெரும்பாலும் மேற்கு போர்னியோவைக் குறிக்கின்றன.[8] அதே வேளையில் சுமத்திராவில் உள்ள ஆச்சே பகுதியில் இருக்கும் போலி(Poli) (சீனம்: 婆利) எனும் சொல்; புரூணையைக் குறிப்பிடுவதாகவும் அறியப்படுகிறது.[9]
வரலாறு
14-ஆம் நூற்றாண்டில், புரூணை நாடு ஜாவா தீவின் ஒரு பகுதியாக இருந்ததாகத் தெரிய வருகிறது. 1365-இல் பிரபஞ்சா (Mpu Prapanca) என்பவரால் எழுதப்பட்ட ஜாவானிய கையெழுத்துப் பிரதியான "நகரகிரேதாகமம்" (Nagarakretagama) எனும் சாவக நூல், புரூணையைமயாபாகித்து பேரரசின் ஆட்சிக்கால மாநிலமாகக் குறிப்பிடுகிறது,[10]மயாபாகித்து பேரரசிற்கு ஆண்டுதோறும் 40 கட்டி கற்பூரத்தை காணிக்கையாகப் புரூணை செலுத்த வேண்டியிருந்தது.
மயாபாகித்து பேரரசுபுரூணையை ஆக்கிரமித்த பிறகு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த பிலிப்பீன்சு இராச்சியங்கள், புரூணைக்கு எதிராகக் கிளர்ச்சிகள் செய்தன. அதில் முதன்மையாக சூலுவின் முன்னாள் இராச்சியம்(Sultanate of Sulu) புரூணையை முற்றுகையிட்டு மிகுதியாகக் கொள்ளையடித்தது.
பொந்தியானா சுல்தானகம்(Pontianak), சமரிண்டா (Samarinda) மற்றும் பஞ்சர்மாசின் (Banjarmasin) மலாய் சுல்தான்கள் புரூணை சுல்தானைத் தங்களின் தலைவராகக் கருதினர்.[20][21][22]
வீழ்ச்சி
1400 முதல் 1890 வரை புரூணை இராச்சியத்தின் இழப்புகள்.
புரூணை சுல்தானகத்தின் பிரபுக்களுக்கும் புரூணை ராஜாவுக்கும் இடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டை சச்சரவுகளின் காரணமாக அருகிலுள்ள சூலு சுல்தானகத்தின் சுல்தானின் அதிகாரம் உயர்ந்தது. இறுதியில் பஜாவு மக்கள் மீதான அதிகாரத்தைப் புரூணை சுல்தானகம் இழந்தது.
17-ஆம் நூற்றாண்டின் இறுதியில், புரூணை அரச பரம்பரைக்குள் எற்பட்ட சண்டைகள்; ஐரோப்பிய சக்திகளின் காலனித்துவ விரிவாக்கம்; மற்றும் கடற்கொள்ளையர்களின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்ட வீழ்ச்சியின் காலகட்டத்திற்குள் நுழைந்த புரூணை சுல்தானகம் தொய்வுநிலையை அடைந்தது.[23]
1888-இல், புரூணை சுல்தான் அசீம் சலிலுல் அலாம் அகமதீன் (Sultan Hashim Jalilul Alam Aqamaddin), புரூணை சுல்தானகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்துமாறு பிரித்தானியர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.[25] அதே ஆண்டில், பிரித்தானியர்கள் புரூணை சுல்தானுடன் ஒரு "பாதுகாப்பு ஒப்பந்தத்தில்" (Treaty of Protection) கையெழுத்திட்டனர்.
அதன் பின்னர் புரூணை சுல்தான்கம் பிரித்தானிய பேரரசின் ஒரு பாதுகாப்பு இராச்சியமாக மாறியது.[6] இந்த நிலை 1984-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அந்த ஆண்டில் புரூணை இராச்சியம் பிரித்தானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.[26][27]
Holt, P. M.; Lambton, Ann K. S.; Lewis, Bernard (1977). The Cambridge History of Islam: Volume 2A, The Indian Sub-Continent, South-East Asia, Africa and the Muslim West. Cambridge University Press. ISBN978-0-521-29137-8.
Brunei Museum Journal (1986). The Brunei Museum Journal. The Museum of Brunei Darussalam.
McArthur, M.S.H.; Horton, A.V.M. (1987). Report on Brunei in 1904. Athens, Ohio: Ohio University Center for International Studies, Center for Southeast Asian Studies. ISBN0-896-80135-7.
Bala, Bilcher (2005). Thalassocracy: a history of the medieval Sultanate of Brunei Darussalam. School of Social Sciences, Universiti Malaysia Sabah. ISBN978-983-2643-74-6.
Hicks, Nigel (2007). The Philippines. New Holland Publishers. ISBN978-1-84537-663-5.
Abdul Majid, Harun (2007). Rebellion in Brunei: The 1962 Revolt, Imperialism, Confrontation and Oil. I.B. Tauris. ISBN978-1-84511-423-7.
Suyatno (2008). "Naskah Nagarakretagama" (in Indonesian). National Library of Indonesia. Archived from the original on 23 மே 2017. Retrieved 27 அக்டோபர் 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
History for Brunei Darussalam: Sharing our Past. Curriculum Development Department, Ministry of Education of Brunei Darussalam. 2009. ISBN978-99917-2-372-3.
Sidhu, Jatswan S. (2009). Historical Dictionary of Brunei Darussalam. Scarecrow Press. ISBN978-0-8108-7078-9.