பிரித்தானிய வடக்கு போர்னியோ
பிரித்தானிய வடக்கு போர்னியோ அல்லது வடக்கு போர்னியோ (North Borneo அல்லது British North Borneo) என்பது போர்னியோ தீவின் வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பிரித்தானிய பாதுகாப்பு நிலப்பகுதி ஆகும். தற்போது சபா என்று அழைக்கப்படுகிறது.[1] 1877 - 1878-ஆம் ஆண்டுகளில் கசுடாவ் ஓவர்பெக் (Gustav Overbeck) எனும் ஒரு செர்மன் தொழிலதிபருக்கு புரூணை சுல்தானும்; சுலு சுல்தானும், ஒரு சலுகையின் அடிப்படையில் இணைந்து வழங்கிய ஒரு நிலப்பகுதியே வடக்கு போர்னியோ நிலப்பகுதி ஆகும். வரலாறு1876-ஆம் ஆண்டில், அமெரிக்க வணிகர் ஜோசப் வில்லியம் டோரே (Joseph William Torrey) என்பவரிடம் இருந்து போர்னியோவின் மேற்கு கடற்கரையில் ஒரு சிறிய நிலத்தை கசுடாவ் ஓவர்பெக் வாங்கினார். 1879-ஆம் ஆண்டில், கசுடாவ் ஓவர்பெக், அந்த நிலத்தின் அனைத்து உரிமைகளையும் ஆல்பிரட் டெண்ட் (Alfred Dent) என்பவருக்கு மாற்றிக் கொடுத்தார். 1881-ஆம் ஆண்டில், அந்த நிலத்தை நிர்வகிக்க, வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம் (North Borneo Provisional Association Ltd) எனும் ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது.[2] வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம்அதே ஆண்டு அந்த நிலத்திற்கு பிரித்தானிய அரசாங்கத்தின் அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1882-ஆம் ஆண்டு, வடக்கு போர்னியோ தற்காலிக சங்கம் என்பது வடக்கு போர்னியோ சார்ட்டர்ட் நிறுவனம் (North Borneo Chartered Company) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த நிறுவனம்தான் பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனம் ஆகும். பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்திற்கு பிரித்தானிய அரச அங்கீகாரம் வழங்கப்பட்டது; அருகாமையில் பிலிப்பீன்சு நாட்டில் இருந்த இசுபானியர்களையும்; இந்தோனேசியாவில் இருந்த டச்சு அதிகாரிகளையும் கவலையடையச் செய்தது. மாட்ரிட் ஒப்பந்தம்இதன் விளைவாக, இசுபானியர்கள் வடக்கு போர்னியோவில் தங்கள் உரிமையையும் கேட்கத் தொடங்கினார்கள். 1885-ஆம் ஆண்டில் ’மாட்ரிட் புரோட்டோகால்’ (Madrid Protocol) எனப்படும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.[3] அந்த வகையில் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் இசுபானியர்களின் செல்வாக்கு அங்கீகரிப்பட்டது. அந்தச் செல்வாக்கு வடக்கு போர்னியோவிற்கு அப்பால் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் உறுதி செய்யப்பட்டது. மற்ற ஐரோப்பிய அரசுகளிடம் இருந்து மேலும் உரிமை கோரல்களைத் தவிர்ப்பதற்காக, 1888-இல் பிரித்தானியப் பாதுகாப்புப் பகுதியாக வடக்கு போர்னியோ மாற்றம் செய்யப்பட்டது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia