பெர்த்திராம் புரூக்
பெர்த்திராம் புரூக் அல்லது துவான் மூடா சரவாக் பெர்த்திராம் புரூக் (ஆங்கிலம்: Bertram Brooke அல்லது Captain Bertram Willes Dayrell Brooke; மலாய்: Tuan Muda Sarawak Kapten Bertram Willes Dayrell Brooke) (பிறப்பு: 8 ஆகஸ்டு 1876 – இறப்பு: 15 செப்டம்பர் 1965), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; சரவாக் இராச்சியத்தில் துவான் மூடா சரவாக் எனும் இளவரசர்.[1] பெர்த்திராம் புரூக், வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் (Charles Brooke) என்பவரின் இரண்டாவது மகனாவார். மூன்றாவது இராஜா சார்லசு வைனர் புரூக்கின் தம்பியாவார். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt).[2] பொதுவெள்ளை இராஜா, (White Rajahs அல்லது Rajah of Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி ஆகும். 1840-ஆம் ஆண்டுகளில், போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியம் ஆட்சி செய்தது. வரலாறுபெர்த்திராம் புரூக் இங்கிலாந்து லண்டன் நகரில் பிறந்தவர். இங்கிலாந்து வின்செஸ்டர் கல்லூரியில் (Clevedon, Winchester College) படித்தவர். முதலாம் உலகப் போரின் போது ஐக்கிய இராச்சியத்தின் அரசக் குதிரைப் படையில் (Royal Horse Artillery) சேவை செய்தவர். பின்னர் சரவாக் பொது சேவையில் இணைந்தார்.[3] பெர்த்திராம் புரூக் 28 ஜூன் 1904-இல் கிளாடிஸ் மில்டன் பால்மர் (Gladys Milton Palmer) என்பவரை மணந்தார். துவான் மூடாவின் மனைவியாக, கிளாடிஸ் மில்டன் பால்மர் "டாயாங் மூடா" (Dayang Muda) என்ற பட்டத்தையும் "மாண்புமிகு" (Her Highness) எனும் அழைப்புப் பாணியையும் பெற்றார். இவர்களுக்கு ஒரு மகன். பெயர் அந்தோனி புரூக். மூன்று மகள்கள்: ஜீன் புரூக்; எலிசபெத் புரூக்; அன்னே புரூக். பெர்த்திராம் புரூக், 1965 செப்டம்பர் 15-ஆம் தேதி லண்டன் மாநகரில் காலமானார்.[2] புரூக் வம்சாவழியினர்
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia