சார்லசு வைனர் புரூக்
வைனர் புரூக் அல்லது சார்லஸ் வைனர் புரூக் (ஆங்கிலம்: Vyner Brooke அல்லது Sir Charles Vyner de Windt Brooke; மலாய்: Raja Putih Charles Vyner Brooke) (பிறப்பு: 26 செப்டம்பர் 1874 – இறப்பு: 9 மே 1963), என்பவர் சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா எனும் புரூக் பரம்பரையில்; மூன்றாவது இராஜாவாக சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்; இவரே வெள்ளை இராஜா பரம்பரையில் கடைசி இராஜாவாகும்.[1] இவர் வெள்ளை இராஜா புரூக் பரம்பரையில் இரண்டாவது இராஜாவான சார்லசு புரூக் என்பவரின் மூத்த மகனாவார். இவரின் தம்பியின் பெயர் பெர்த்திராம் புரூக். சரவாக்கின் துவான் மூடா (Tuan Muda of Sarawak) பதவி வகித்தவர். தாயாரின் பெயர் இராணி மார்கரெட் ஆலிஸ் லிலி டி விண்ட் (Ranee Margaret Alice Lili de Windt). இவர் 24 மே 1917 தொடங்கி 1 சூலை 1946 வரையில் 29 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] பொதுவெள்ளை இராஜா, (White Rajahs அல்லது Rajah of Sarawak) என்பது சரவாக் மாநிலத்தில், சரவாக் இராச்சியம் எனும் ஆட்சியை நிறுவிய ஒரு பிரித்தானியக் குடும்பத்தின் வம்ச முடியாட்சி. அதுவே ஒரு முன்னாள் மன்னராட்சி ஆகும். 1840-ஆம் ஆண்டுகளில், போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியம் ஆட்சி செய்தது. வரலாறுசார்லசு புரூக் இங்கிலாந்து லண்டன் நகரில் பிறந்தவர். இங்கிலாந்து கிளிவ்டென் வின்செஸ்டர் கல்லூரியில் (Clevedon, Winchester College) படித்தார். பின்னர் சரவாக் பொது சேவையில் இணைந்தார். சேவைகள்வைனர் புரூக், சரவாக்கிற்கு வந்த பின்னர் தன் தந்தையார் சார்லசு புரூக்கிற்கு பல அரசு துறைகளில் உதவியாளராகப் பணியாற்றினார்.
சரவாக் இராஜா பதவிதந்தையார் சார்லசு புரூக் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, வைனர் புரூக் 1917 மே 17-ஆம் தேதி அரசு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 1917 மே 24-ஆம் தேதி கூச்சிங்கில் சரவாக் வெள்ளை இராஜாவாக அறிவிக்கப்பட்டார். 1918 சூலை 22-ஆம் தேதி மாநிலச் சட்டமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். தொடக்கக் காலத்தில் தன் இளைய சகோதரர் பெர்த்திராம் புரூக்குடன் இணைந்து பணிகளை மேற்கொண்டார். சரவாக் வளர்ச்சிவைனர் புரூக் ஆட்சிக் காலத்தில் சரவாக்கில் ரப்பர் மற்றும் எண்ணெய்த் தொழில்கள் ஏற்றம் கண்டன. சரவாக் பொருளாதாரத்தில் அடுத்தடுத்து நல்வளர்ச்சிகள் ஏற்பட்டன. அதனால் சரவாக் இராச்சியத்தின் பொதுச் சேவை உட்பட பல அரசு நிறுவனங்கள் நவீன மயமாக்கப் பட்டன. மேலும் 1924-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவில் உருவாக்கப்பட்ட தண்டனைச் சட்டம் சரவாக் இராச்சியத்திலும் அறிமுகம் செய்யப்பட்டது. 1927-இல், வைனர் புரூக்கிற்கு ஐக்கிய இராச்சியத்தால் சர் பட்டம் வழங்கப்பட்டது. வைனர் புரூக் தொடர்ந்து மக்கள் போற்றும் அளவிற்கு அரசு நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்தினார்.[3] பொதுமக்கள் நலன்கள்கிறித்துவப் பாதிரியார்களின் பிரசாரங்களுக்குத் தடை விதித்து; உள்நாட்டு ஆன்மீக மரபு வழக்கங்களுக்கு ஆதரவு வழங்கினார். தலை வேட்டையாடும் பழக்கம் சட்டவிரோதமாக்கப் பட்டது. 1941-ஆம் ஆண்டு சரவாக் இராச்சியத்தின் புதிய அரசியலமைப்பின் மூலம் வைனர் புரூக், தன் அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டார். அதற்கு ஈடாக, அவரின் தனிப்பட்ட செலவினங்களுக்காகக் கருவூலத்தில் இருந்து £200,000 பெற்றுக் கொண்டார். இரண்டாம் உலகப் போர்இந்தக் கட்டத்தில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. அதே வேளையில் ஜப்பானியரின் போர்னியோ ஆக்கிரமிப்பும் தொடங்கியது. 1941 டிசம்பர் 25-ஆம் தேதி வைனர் புரூக்கும் அவரின் குடும்பத்தினரும் ஆஸ்திரேலியா சிட்னி நகருக்குப் பயணம் கொண்டனர். இரண்டாம் உலகப் போரின் போது அங்கு அவர்கள் தங்கி இருந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, வைனர் புரூக் 15 ஏப்ரல் 1946-இல் சரவாக்கிற்குத் திரும்பினார். தற்காலிகமாக, சரவாக் ராஜாவாக அதிகாரத்தைத் தொடர்ந்தார். வெள்ளை இராஜா ஆட்சி முடிவு1946 சூலை 1-ஆம் தேதி, பிரித்தானிய அரசாங்கத்திடம் சரவாக் இராச்சியத்தை ஒரு முடியாட்சிக் காலனியாக விட்டுக் கொடுத்தார். அத்துடன் சரவாக்கில் வெள்ளை இராஜா ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது. அவர் இறந்து நான்கு மாதங்களுக்கு பிறகு, சரவாக், மலாயா, வடக்கு போர்னியோ, சிங்கப்பூர் ஆகியக் குடியேற்றப் பகுதிகள் ஒன்றிணைந்து 16 செப்டம்பர் 1963-இல் மலேசியா எனும் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டன. வைனர் புரூக், 1963 மே 9-ஆம் தேதி லண்டன் மாநகரில் காலமானார்.[2] புரூக் குடும்பம்புரூக் வம்சாவழியினர்
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia