புழல்
புழல் (ஆங்கிலம்:Puzhal), இந்திய மாநகரம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். இவ்வூரில் புழல் ஏரி அமைந்துள்ளது. சங்க காலத்தில்,கோமாண்ட குறும்பா பிரபு அல்லது புழல் ராஜா என்னும் மன்னர் புழலில் கோட்டைக்கட்டி ஆட்சி புரிந்தார். பிர் காலங்களில் சோழர்களால் இந்த கோட்டையானது கைப்பற்றப்பட்டது என அறியப்படுகிறது. மக்கள் வகைப்பாடுஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,297 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். புழல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புழல் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia