பெமேதரா மாவட்டம்
பெமேதரா மாவட்டம் (Bemetara district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். துர்க் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான பெமேதரா நகரம் ஒரு நகராட்சி மன்றமும் ஆகும். இம்மாவட்டம் 8 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[1] மாவட்ட எல்லைகள்இம்மாவட்டத்தின் வடக்கில் முங்கேலி மாவட்டம், மேற்கில் கவர்தா மாவட்டம், கிழக்கில் ராய்ப்பூர் மாவட்டம் மற்றும் பலோடா பஜார் மாவட்டம் மற்றும் தெற்கில் துர்க் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது. பொருளாதாரம்வேளாண்மை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பெமேதரா மாவட்டத்தில், எண்பது விழுக்காடு மக்கள் வேளாண்மை நிலத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். பத்து விழுக்காடு மக்கள் மாத ஊதியத்திலும், பத்து விழுக்காடு மக்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்வித் துறை இம்மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறது. பெமேதரா நகராட்சி மன்றம் ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் கலால் வரியாக பெறுகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 12 இம்மாவட்டம் வழியாக செல்கிறது. மாவட்ட நிர்வாகம்பெமேதரா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பெமேதரா மாவட்டம் சஜா மற்றும் பெமேதரா என இரண்டு வருவாய் உட்கோட்டங்களையும், நவாகர், பெமேதரா, சஜா, தான் காம்கரியா மற்றும் பெர்லா என ஐந்து வருவாய் வட்டங்களையும் கொண்டது.[2] இம்மாவட்டம் 700 கிராமங்களும் 387 கிராமப் பஞ்சாயத்து மன்றங்களும் கொண்டது. நவகர், பெமேதரா, சஜா மற்றும் பெரலா என நான்கு வட்டார வளர்ச்சி அலுவலகங்களைக் கொண்டது. இனக்குழுக்கள்சத்தீஸ்கர் மாநிலத்தின் மையத்தில் அமைந்த இம்மாவட்டத்தில், ஆரிய-திராவிட இனக் குழு மக்கள் வாழ்கின்றனர். மேலும் சிறிய அளவிலான பழங்குடி மக்களும் வாழ்கின்றனர். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia