ராய்கர்
இராய்கர் (Raigarh) என்பது இந்தியா தீபகற்பத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின், ராய்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மாநகராட்சியும் ஆகும். ராய்கர் நகரம் சத்தீஸ்கர் மாவட்டத்தின் பண்பாட்டுத் தலைமையிடம் ஆகும். மேலும் இராய்கர் நகர்புறத்தில் நிலக்கரி, இரும்புச் சுரங்கங்களுக்கு பெயர்பெற்றது. மேலும் நெற்களஞ்சியங்கள் கொண்டது. மாநிலத் தலைநகரான இராய்ப்பூருக்கு வடகிழக்கே 230 கி.மீ. தொலைவில் இராய்கர் நகரம் உள்ளது. புவியியல் & தட்பவெப்பம்இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், இராய்கர் மாநகரம், 21°53′51″N 83°23′42″E / 21.8974°N 83.3950°E[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 243.70 மீட்டர் (799.5 அடி) உயரத்தில், கேலா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தில், கோடைக்காலத்தில் குறைந்த, அதிகபட்ச வெயில் 29.5 °C - 49 °C ஆகவும், குளிர்காலத்தில் 8 °C - 25 °C வெப்பமும் காணப்படுகிறது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 48 வார்டுகள் கொண்ட இராய்ப்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 137,126 ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,994 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 953 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 87.02% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 90.20 %, இசுலாமியர்கள் 5.50 %, கிறித்தவர்கள் 2.99 %, சீக்கியர்கள் 0.85 % மற்றவர்கள் 0.47% ஆகவுள்ளனர்.[1] இராய்ப்பூர் மாநகரத்தில் இந்தி, ஒடியா, தெலுங்கு, வங்காள மொழிகள் அதிகம் பேசப்படுகின்றன. போக்குவரத்துதொடருந்து சேவைகள்![]() ஜம்சேத்பூர் - பிலாஸ்பூர் மற்றும் அவுரா-நாக்பூர்-மும்பை இருப்புப் பாதை வழித்தடத்தில் ராய்கர் தொடருந்து நிலையம் உள்ளது. இராய்ப்பூர் தொடருந்து நிலையம் புதுதில்லி, மும்பை, கோட்டா, கொல்கத்தா, அகமதாபாத், புவனேஸ்வர், நாக்பூர், பாட்னா மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களுடன் இணைக்கிறது.[2] வானூர்தி நிலையம்இராய்கர் நகரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் கொண்டாதரை எனுமிடத்தில் உள்நாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia