ராஜ்நாந்துகாவ் மாவட்டம்
ராஜ்நாந்துகாவ் மாவட்டம், சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று[1]. இதன் தலைமையகம் ராஜ்நாந்துகாவ் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 26 சனவரி 1973 அன்று துர்க் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு நிறுவப்பட்டது. 1 சூலை 1998 அன்று இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு கபீர்தாம் மாவட்டம் நிறுவப்பட்டது. 10 செப்டம்பர் 2022 அன்று இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொன்டு கைராகர்-சுய்காடன்-கண்டாய் மாவட்டம் நிறுவப்பட்டது. நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும்.[2][3] மாவட்ட நிர்வாகம்8022.55 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 1,537,133. இம்மாவட்டம் 4 ஊராட்சி ஒன்றியங்களையும், 1648 கிராமங்களையும், 8 நகராட்சிகளையும், 41 காவல் நிலையங்களையும், 49 கல்லூரிகளையும், 6 மருத்துவமனைகளையும் கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி ராஜ்நாந்துகாவ் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,537,133 ஆகும். அதில் ஆண்கள் 762,855 மற்றும் பெண்கள் 774,278 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,015 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 75.96% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,56,623 மற்றும் 4,05,194 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 91.06%, இசுலாமியர் 1.54%, பௌத்தர்கள் 1.86%, சமணர்கள் 0.53%, சீக்கியர்கள் 0.24%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 4.44% ஆகவுள்ளனர்.[4] போக்குவரத்துமும்பை-ஹவுரா செல்லும் தொடருந்துகள் ராஜ்நாந்துகாவ் தொடருந்து வழியாகச் செல்கிறது. இதனையும் காண்கசான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia