1951 ஆம் ஆண்டில் மக்னீசியம், ஐதரசன் ஆகிய தனிமங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது. MgI2வினையூக்கியின் முன்னிலையில் அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலையில் (200 வளிமண்டல அழுத்தம், 500 °செல்சியசு) மக்னீசியம் உலோகத்துடன் நேரடியாக ஐதரசனைச் சேர்த்து ஐதரசனேற்றம் செய்து மக்னீசியம் ஐதரைடு தயாரிக்கப்பட்டது:[3]
Mg + H2 → MgH2
கோளகை அரைவை எந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் நுண்படிக மக்னீசியத்தைப் பயன்படுத்தி Mg மற்றும் H2 தனிமங்களிலிருந்து குறைந்த வெப்பநிலையில் மக்னீசியம் ஐதரைடு உற்பத்தி ஆய்வு செய்யப்பட்டது.[4] பிற தயாரிப்பு முறைகளில் பின்வருவன அடங்கும்:
பீனைல்சிலேனுடன் ஈதர் அல்லது ஐதரோகார்பன்கரைப்பான்களில் கரைக்கப்பட்ட டைபியூட்டைல் மக்னீசியம் சேர்மத்துடன் டெட்ரா ஐதரோ பியூரான் அல்லது டெட்ராமெத்திலெத்திலீன்டையமீன் ஈந்தணைவி முன்னிலையில் சிக்கலான MgH2 இன் தயாரிப்பான MgH2.THF தயாரிக்கப்படுகிறது.[1]
கட்டமைப்
அறை வெப்பநிலையில் α-MgH2 வடிவம் ஓர் உரூட்டைல் கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[7] மக்னீசியம் ஐதரைடுக்கு குறைந்தபட்சம் நான்கு உயர் அழுத்த வடிவங்கள் உள்ளன: α-PbO2 கட்டமைப்பைக் கொண்ட γ-MgH2[8], Pa-3 என்ற இடக்குழுவுடன் கூடிய கனசதுர β-MgH2[9] , Pbc21 என்ற இடக்குழுவுடன் கூடிய செஞ்சாய்சதுர எச்பி1 மற்றும் Pnma என்ற இடக்குழுவுடன் கூடிய செஞ்சாய்சதுர எச்பி2 [10] ஆகியவை மக்னீசியம் ஐதரைடு வடிவங்களாகும். கூடுதலாக ஒரு விகிதவியலுக்கு ஒவ்வாத MgH(2-δ) வடிவமும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மிகச் சிறிய துகள்களுக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. [11] (பேரளவு MgH2 சேர்மத்திற்கு விகிதவியல் அவசியமாகும். ஏனெனில், இது H காலியிடங்களின் மிகக் குறைந்த செறிவுகளுக்கு மட்டுமே இடமளிக்கும்) [12]).
பிணைப்பு
உரூட்டைல் வடிவத்தில் காணப்படும் பிணைப்பு சில சமயங்களில் முற்றிலும் அயனிப்பிணைப்பாக இல்லாமல் இயற்கையில் ஓரளவு சகப்பிணைப்பு என்று விவரிக்கப்படுகிறது.[13] மின் விசையை அதிகப்படுத்தும் சாதன எக்சுகதிர் விளிம்பு விளைவு சோதனை மூலம் மேற்கொள்ளப்பட்ட மின்னூட்ட அடர்த்தி நிர்ணயம், மக்னீசியம் அணு முழுமையாக அயனியாக்கம் அடைந்து கோள வடிவில் உள்ளது என்றும் ஐதரைடு அயனி நீளமானது என்பதையும் குறிக்கிறது.[14] MgH, MgH2, Mg2H, Mg2H2, Mg2H3 மற்றும் Mg2H4 ஆகிய மக்னீசியம் ஐதரைடின் மூலக்கூறுகள் அதிர்வு நிறமாலை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மூலக்கூறு வடிவங்கள் 10 கெல்வினுக்கும் குறைவான அணிக்கோவையில் தனிமைப்படுத்தப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஐதரசனின் சீரொளி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாகின்றன. [15] Mg2H4 மூலக்கூறு இருபடி அலுமினியம் ஐதரைடு (Al2H6) போன்ற ஒரு பாலம் அமைப்பைக் கொண்டுள்ளது.[15]
வினைகள்
மக்னீசியம் ஐதரைடு தண்ணீருடன் நன்றாக வினைபுரிகிறது. ஐதரசன் வாயு வெளியிடப்படுகிறது.
MgH2 + 2 H2O → 2 H2 + Mg(OH)2
287 °செல்சியசு வெப்பநிலையில் 1 பார் அழுத்தத்தில்[16] சிதைந்து ஐதரசனை உருவாக்குகிறது.[16] மீளக்கூடிய ஐதரசன் சேமிப்பு ஊடகமாக MgH2 சேர்மத்தைப் பயன்படுத்துவதில் அதிக வெப்பநிலை ஒரு வரம்பாகக் கருதப்படுகிறது:[17]
MgH2 → Mg + H2
மேற்கோள்கள்
↑ 1.01.1Michalczyk, Michael J (1992). "Synthesis of magnesium hydride by the reaction of phenylsilane and dibutylmagnesium". Organometallics11 (6): 2307–2309. doi:10.1021/om00042a055.
↑Bogdanovic, Borislav (1985). "Catalytic Synthesis of Organolithium and Organomagnesium Compounds and of Lithium and Magnesium Hydrides - Applications in Organic Synthesis and Hydrogen Storage". Angewandte Chemie International Edition in English24 (4): 262–273. doi:10.1002/anie.198502621.
↑Bogdanović, Borislav; Liao, Shih-Tsien; Schwickardi, Manfred; Sikorsky, Peter; Spliethoff, Bernd (1980). "Catalytic Synthesis of Magnesium Hydride under Mild Conditions". Angewandte Chemie International Edition in English19 (10): 818. doi:10.1002/anie.198008181.
↑Barbaras, Glenn D; Dillard, Clyde; Finholt, A. E; Wartik, Thomas; Wilzbach, K. E; Schlesinger, H. I (1951). "The Preparation of the Hydrides of Zinc, Cadmium, Beryllium, Magnesium and Lithium by the Use of Lithium Aluminum Hydride1". Journal of the American Chemical Society73 (10): 4585. doi:10.1021/ja01154a025.
↑Zachariasen, W. H; Holley, C. E; Stamper, J. F (1963). "Neutron diffraction study of magnesium deuteride". Acta Crystallographica16 (5): 352. doi:10.1107/S0365110X63000967.
↑Bortz, M; Bertheville, B; Böttger, G; Yvon, K (1999). "Structure of the high pressure phase γ-MgH2 by neutron powder diffraction". Journal of Alloys and Compounds287 (1–2): L4–L6. doi:10.1016/S0925-8388(99)00028-6.
↑Moriwaki, Toru; Akahama, Yuichi; Kawamura, Haruki; Nakano, Satoshi; Takemura, Kenichi (2006). "Structural Phase Transition of Rutile-Type MgH2at High Pressures". Journal of the Physical Society of Japan75 (7): 074603. doi:10.1143/JPSJ.75.074603. Bibcode: 2006JPSJ...75g4603M.
↑Schimmel, H. Gijs; Huot, Jacques; Chapon, Laurent C; Tichelaar, Frans D; Mulder, Fokko M (2005). "Hydrogen Cycling of Niobium and Vanadium Catalyzed Nanostructured Magnesium". Journal of the American Chemical Society127 (41): 14348–54. doi:10.1021/ja051508a. பப்மெட்:16218629.
↑Grau-Crespo, R.; K. C. Smith; T. S. Fisher; N. H. de Leeuw; U. V. Waghmare (2009). "Thermodynamics of hydrogen vacancies in MgH2 from first-principles calculations and grand-canonical statistical mechanics". Physical Review B80 (17): 174117. doi:10.1103/PhysRevB.80.174117. Bibcode: 2009PhRvB..80q4117G.
↑எஃப். ஆல்பர்ட் காட்டன்; சாப்ரி வில்கின்சன்; கார்லோசு முரில்லோ; மேன்பிரட் பாக்மன் (1999), Advanced Inorganic Chemistry (6வது ed.), நியூ யார்க்கு: வைலி-இன்டசயின்சு, ISBN0-471-19957-5
↑Noritake, T; Towata, S; Aoki, M; Seno, Y; Hirose, Y; Nishibori, E; Takata, M; Sakata, M (2003). "Charge density measurement in MgH2 by synchrotron X-ray diffraction". Journal of Alloys and Compounds356-357: 84–86. doi:10.1016/S0925-8388(03)00104-X.
↑ 15.015.1Wang, Xuefeng; Andrews, Lester (2004). "Infrared Spectra of Magnesium Hydride Molecules, Complexes, and Solid Magnesium Dihydride". The Journal of Physical Chemistry A108 (52): 11511. doi:10.1021/jp046410h. Bibcode: 2004JPCA..10811511W.