மக்னீசியம் பெர்குளோரேட்டு
மக்னீசியம் பெர்குளோரேட்டு (Magnesium perchlorate) என்பது Mg(ClO4)2.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மக்னீசியம் ஐதராக்சைடுடன் பெர்குளோரிக் அமிலத்தைச் சேர்த்து மக்னீசியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியாக செயல்படும் இச்சேர்மம் வாயு பகுப்பாய்வுகளில் மேபடுத்தப்பட்ட உலர்த்தும் முகவராகவும் செயல்படுகிறது. 250[1] 0 செல்சியசு வெப்பநிலையில் மக்னீசியம் பெர்குளோரேட்டு சிதைவடைகிறது. இதனுடைய உருவாதல் வெப்பம் 568.90 கியூ மோல்−1 ஆகும்.[2] கரைசலின் வெப்ப உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் அனைத்து வினைகளும் பெருமளவு நீரில் மேற்கொள்ளபடுகிறது அனைதரோன் என்ற வணிகப்பெயரில் மக்னீசியம் பெர்குளோரேட்டு விற்பனை செய்யப்படுகிறது. உர்பானா இல்லினோயிசு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஜி.பிரெடரிக் சிமித் தன்னுடைய வாகனப் பணிமணையில் பகுதிச் தொழிற்சாலைப் பொருளாக அனைதரோனை உற்பத்தி செய்தார். பின்னர் நிரந்தரமாக அமெரிக்காவின் ஓகைய்யோ மாநிலத்தின் தலைநகரமான கொலம்பசுவில் ஜி. பிரெடரிக் சிமித் வேதியியல் நிறுவனத்தில் நிரந்தரமாக தயாரிக்கத் தொடங்கினார். அவர் தன்னுடைய உற்பத்திப் பொருளான மக்னீசியம் பெர்குளோரேட்டை, தற்பொழுது தாமசு அறிவியல் நிறுவனமாக Thomas Scientific உள்ள அன்றைய ஏ.எச். தாமசு நிறுவனத்திற்கு டி ஐதரைட்டு என்ற வணிகப்பெயரில் விற்அனை செய்தார். உலர் வாயு அல்லது வாயு மாதிரிகளுக்கு உலர் ஊக்கியாக இது பயன்படுத்தப்படுகிறது[3][4]. ஆனால் பெர் குளோரேட்டுகளின் இயல்பான தீங்கு விளைவுகளின் காரணமாக, ஒரு பொது உலர் ஊக்கியாக இது பரிந்துரைக்கப்படுவதில்லை[5]. வெற்றிடத்தில் 250 0 செல்சியசு வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி மக்னீசியம் பெர்குளோரேட்டு உலர்த்தப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia