மக்னீசியம் முச்சிலிக்கேட்டு
மக்னீசியம் முச்சிலிக்கேட்டு (Magnesium trisilicate) என்பது Mg2O8Si3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், உணவுச் சேர்ப்புப் பொருளாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. விரைவு உணவு வகைகள் தயாரிக்கையில் பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களை ஈர்க்கவும் வறுத்தலின் போது மாசுபடும் உணவு எண்ணெய்களின் மாசுக்களை நீக்கவும் இச்சேர்மம் சேர்க்கப்படுகிறது. உடல்நலவியல் விளைவுகள்சீனாவின் சுகாதார அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டு மார்ச்சு 12 அன்று சென்சி மாகாணத்தில் இயங்கி வந்த கே.எப்.சி, முகவர்களிடமிருந்து மக்னீசியம் முச்சிலிக்கேட்டை பறிமுதல் செய்ததோடு இதை தொடர்ந்து பயன்படுத்துவதற்கும் தடை விதித்தனர்[1] . சாத்தியமான ஒரு புற்று நோய்க் காரணியாக இருக்கலாம் என்று இச்சேர்மத்தை அவர்கள் சந்தேகித்தனர். இதன் விளைவாக சீனாவின் சுகாதார அமைச்சகம் கே.எப்.சி, முகவர்களின் ஆறு விற்பனை நிலையங்களில் சோதனை மேற்கொண்டது[2]. நாட்டிலிருந்த கே.எப்.சி உணவகங்களில் சமைத்தலின் போது பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள்களால் உடல்நலத்திற்கு தீங்கேதுமில்லை என்று அச்சோதனை முடிவுகள் தெரிவித்தன[3]. சமையல் எண்ணெய்களை வடிகட்டப் பயன்படும் இப்பொருளால் தீங்கேதுமில்லை என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. சீன ஊடகங்கள் முழுவீச்சில் இவ்வுணவுச் சிக்கலை ஒழுங்குபடுத்தின[4] வயிற்றுப் புண்கள் சிகிச்சையில் மெக்னீசியம் முச்சிலிக்கேட்டை ஒரு அமில நீக்கியாக பயன்படுத்த முடியும். நடுநிலையாக்கல் வினை வழியாக இரைப்பைச்சாறின் காரத்தன்மையை இது அதிகரிக்கச் செய்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia