மக்னீசியம் சிலிசைடு
மக்னீசியம் சிலிசைடு (Magnesium silicide) என்பது Mg2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், மக்னீசியம் மற்றும் சிலிக்கன் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. மக்னீசியம் சிலிசைடு தூளாக இருக்கும்போது அடர் நீலம் அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது. தயாரிப்பு2:1 என்ற விகிதத்தில் சிலிக்கன் மற்றும் மக்னீசியம் தனிமங்களைச் சேர்த்து மக்னீசியம் சிலிசைடு தயாரிக்கப்படுகிறது. மணலில் உள்ள சிலிக்கன் ஈராக்சைடை அதிக அளவு மக்னீசியத்துடன் சேர்த்து சூடாக்குவதன் மூலமும் இதைத் தயாரிக்க முடியும். இவ்வினையின் முதலில் மக்னீசியம் ஆக்சைடும் சிலிக்கன் உலோகமும் உருவாகின்றன. அதிக அளவு மக்னீசியம் இங்கு உபயோகப்படுத்தப்பட்டால் மக்னீசியம் சிலிசைடு உருவாகிறது.
அதிக அளவாகக் காணப்படும் மக்னீசியம், சிலிக்கனுடன் வினைபுரிவதால் மக்னீசியம் சிலிசைடு உருவாகிறது
எனவே, ஒட்டுமொத்தமான வினையில் 4:1 என்ற மூலக்கூற்று விகிதத்தில் Mg:SiO2 வினையின் நிகழ்வை இச்சமன்பாடு மூலம் அறியலாம்.
இவ்வினைகள் வெப்ப உமிழ் வினைகளாக நிகழ்கின்றன. [1] பயன்கள்அலுமினியக் கலப்புலோகமான 6000 வரிசை கலப்புலோகம் தயாரிக்க மக்னீசியம் சிலிசைடு பயன்படுகிறது. இக்கலப்புலோகத்தில் தோராயமாக 1.5% Mg2Si காணப்படுகிறது. மேலும், இத்தொகுதியைச் சேர்ந்த கலப்புலோகங்களைப் பயன்படுத்தி கினீயர்-பிரசுடோன் மண்டலத்தின் நாட்பட்ட வன்மை மற்றும் நுண் வீழ்படிவை உருவாக்க முடியும். இவ்விரு நிகழ்வுகளும் கலப்புலோகத்தின் வலிமையை மேலும் அதிகரிக்கச் செய்யும். [2] வினைகள்மக்னீசியம் சிலிசைடில் Si4− அயனிகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இந்த அடிப்படையில் இச்சேர்மம் அமிலங்களுடன் வினைபுரிகிறது.. நீர்த்த ஐதரோ குளோரிக் அமிலத்துடன் மக்னீசியம் சிலிசைடு வினைபுரிந்து வாயுநிலை சிலேன் (SiH4) உருவாகிறது.
கந்தக அமிலத்தையும் இவ்வினையில் பயன்படுத்த முடியும். இரண்டாம் தொகுதி சிலிசைடுகள், குறிப்பாக புரோட்டான் பகுப்பு வினைகளுக்கு ஏற்றவையாகும். தொகுதி ஒன்று சிலிசைடுகள் அதிக வினைத்திறம் கொண்டவையாக உள்ளன. உதாரணமாக சோடியம் சிலிசைடு (Na2Si) தண்ணீருடன் விரைவாக வினைபுரிந்து சோடியம் சிலிக்கேட்டையும் ஐதரசன் வாயுவையும் தருகிறது. படிக அமைப்புஎதிர்புளோரைட்டு வகை படிக அமைப்பில் மக்னீசியம் சிலிசைடு படிகமாகிறது. முகமைய கனசதுரத்தில் அணிக்கோவை Si மையங்கள் கனசதுரத்தின் மூலைகள் மற்றும் அலகு கூட்டின் முகமைய நிலைகளில் அமைகின்றன. அலகுக் கூட்டின் உட்பகுதியின் எட்டு நான்முகத் தளங்களை மக்னீசியம் மையங்கள் ஆக்ரமிக்கின்றன. சிலிக்கன் மற்றும் மக்னீசியத்தின் அணைவு எண்கள் முறையே 8 மற்றும் 4 ஆக உள்ளன[3]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia