பேரியம் குளோரேட்டு
பேரியம் குளோரேட்டு (Barium chlorate) Ba(ClO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். வெண்மை நிறத்தில் இருக்கும் இச்சேர்மமானது குளோரிக் அமிலத்தினுடைய பேரியம் உப்பாகும். கரையும் தன்மை கொண்ட அனைத்து பேரியம் உப்புகளையும் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மையும் உறுத்தலையும் அளிக்கிறது. சில சமயங்களில் பச்சை நிற ஒளியை தருவதற்காகப் பட்டாசுத் தொழிலிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் குளோரிக் அமிலத் தயாரிப்பில் பெரும் பங்கும் வகிக்கிறது. தயாரிப்புபேரியம் குளோரைடு கரைசல் மற்றும் சோடியம் குளோரேட்டு கரைசல் ஆகிய கரைசல்கள் இரட்டை இடப்பெயர்ச்சி வினையின் மூலமாக பேரியம் குளோரேட்டை உருவாக்குகின்றன.
வினையில் உருவாகும் கலவையை அடர்வூட்டல் மற்றும் குளிர்வூட்டலுக்கு உட்படுத்துவதால் பேரியம் குளோரேட்டு வீழ்படிவாகிறது. சோடியம் குளோரேட்டை விட பேரியம் குளோரேட்டு குறைவான கரைதிறன் கொண்டது என்பதை அறிய உதவும் இவ்வினையே பேரியம் குளோரேட்டு தயாரிக்கும் பொதுவான முறையாகும். இம்முறையில் தயாரிக்கப்படும் பேரியம் குளோரேட்டில் சிறிதளவு சோடியம் மாசாக கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இம்மாசு பட்டாசுத் தொழிலில் விரும்பத்தகாத ஒரு மாசாகும். சோடியத்தின் அடர் மஞ்சள் நிறம் பேரியத்தின் பச்சை நிறத்தை மங்கலாக்கி விடுகிறது. எனவே சோடியம் கலக்காத பேரியம் குளோரேட்டை நேரடியாக மின்னாற்பகுப்பு முறையில் தயாரிக்கிறார்கள்.
பேரியம் கார்பனேட்டுடன் அமோனியம் குளோரேட்டுக் கரைசலைச் சேர்த்து கொதிக்க வைப்பதாலும் பேரியம் குளோரேட்டு தயாரிக்க முடியும்:[1]
வினையில் முதலில் பேரியம் குளோரேட்டும் அமோனியம் கார்பனேட்டும் உருவாகின்றன. கலவையைக் கொதிக்க வைப்பதால் அமோனியம் கார்பனேட்டு சிதைவடைந்து அமோனியா மற்றும் கார்பன் டைஆக்சைடாக வெளியேறுகிறது. தூய்மையான பேரியம் குளோரேட்டு கரைசல் கிடைக்கிறது. ![]() சிதைவடைதல்வெப்பத்தில் காட்டப்பட்டால் பேரியம் குளோரேட்டு, பேரியம் குளோரைடு மற்றும் ஆக்சிசனாகச் சிதைவடைகிறது.
குளோரிக் அமிலம்அனைத்து குளோரேட்டு உப்புகளையும் தயாரிப்பதற்கு முன்னோடியான குளோரிக் அமிலம் தயாரிப்பதற்கு பேரியம் குளோரேட்டு பயன்படுகிறது. பேரியம் குளோரேட்டுடன் நீர்த்த கந்தக அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் குளோரிக் அமிலம் உருவாகிறது. கரையாத பேரியம் சல்பேட்டு வீழ்படிவாக அடியில் தங்குகிறது.
குளோரேட்டு மற்றும் குளோரிக் அமிலம் இரண்டுமே நீர்த்த நிலையிலேயே தயாரிக்கப்படுகின்றன. 30 சதவீதத்திற்கு மேற்பட்ட அடர்த்தியைக் கொண்ட குளோரிக் அமிலம் நிலைப்புத்தன்மை அற்றதாக உள்ளது. சிலசமயங்களில் வெடித்தலுடன் சிதைவடைதலும் உண்டு. பயன்கள்ஒரு எரிபொருளுடன் சேர்ந்து எரியும் பொழுது பேரியம் குளோரேட்டு அதிர்வுகளுடனான பச்சைநிற ஒளியைத் தருகிறது. ஏனெனில் இதுவொரு வலிமையான ஆக்சிசனேற்றி, குளோரின் வழங்கி மற்றும் ஒரு உலோகத்தையும் கொண்டிருக்கிறது. குளோரேட்டுகள் எளிதாகச் சிதைவடைந்து கந்தகம், அமோனியம் மற்றும் அமிலங்களைத் தருவதால், பட்டாசுத் தொழிலில் இதைப் பயன்படுத்துவது அமெரிக்காவில் தடை செய்யப்ப்பட்டுள்ளது. நிலைப்புத்தன்மை கொண்ட பேரியம் நைட்ரேட்டு மற்றும் பேரியம் கார்பனேட்டு போன்ற சேர்மங்கள் அங்கு பயன்படுகின்றன[2] சுற்றுச்சூழல் தீங்குமனிதர்களுக்கு நச்சுத்தன்மையானது என்பதோடு மட்டுமின்றி பேரியம் குளோரேட்டு சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. தண்ணீரில் இச்சேர்மம் கலக்க நேர்ந்தால் நீர்வாழ் உயிரினங்களைப் பெரிதும் பாதிக்கிறது. பேரியம் குளோரேட்டு சிதறல் சூழல் மண்டலத்தை ஒட்டு மொத்தமாக பாதிக்கும் என்பதால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் இதனை அபாயகரமான வேதிப்பொருட்கள் என வகைப்படுத்துகின்றன.[3][4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia