மூவேந்தர் முன்னணிக் கழகம்அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் அல்லது மூவேந்தர் முன்னணிக் கழகம் தமிழ்நாட்டில் செயல்படும் ஒரு அரசியல்கட்சி ஆகும். முக்குலத்தோர் சாதியினரிடையே ஆதரவைப் பெற்றுள்ளது. இதன் நிறுவனர் மற்றும் தலைவர் மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சேதுராமன் ஆவார். 1998இல் நிறுவப்பட்ட இக்கட்சி[1] “மூவேந்தர் முன்னேற்ற முன்னணி”, ”மூவேந்தர் முன்னேற்றக் கழகம்”, ”மூவேந்தர் முன்னணிக் கழகம்” என பல்வேறு பெயர்களால் அறியப்பட்டாலும், அதன் நிறுவனரின் பெயரால் “டாக்டர் சேதுராமன் கட்சி” என்று பரவலாக அடையாளப்படுத்தப்படுகிறது. கடந்த காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இக்கட்சி, தற்சமயம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து தெற்கு மாவட்டங்களை தென் தமிழ் மாநிலம் என்ற பெயரில் தனி மாநிலமாக்க வேண்டுமென்பது இக்கட்சியின் கொள்கைகளுள் ஒன்றாகும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia