ஜோகுலம்பா கட்வால் மாவட்டம்
![]() ![]() சோகுலம்பா கட்வால் மாவட்டம் (Jogulamba Gadwal district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கட்வால் நகரம் ஆகும்.[3] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சோகுலம்பா மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. மக்கள் தொகையியல்2,928 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது சோகுலம்பா மாவட்டம். [4]சோகுலம்பா மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–33 ஆகும். [5] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோகுலம்பா மாவட்ட மக்கள் தொகை 6,64,971 ஆகும்.[4] மாவட்ட நிர்வாகம்சோகுலம்பா மாவட்டம், கட்வால் என்ற ஒரு வருவாய் கோட்டத்தையும், 12 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [3] புதிதாக நிறுவப்பட்ட சோகுலம்பா மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக ரசத் குமார் சைனி பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.[6] வருவாய் வட்டங்கள்சோகுலம்பா மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களின் விவரம்:[7]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia