ரெங்கம் தொடருந்து நிலையம்
ரெங்கம் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Rengam Railway Station; மலாய்: Stesen KTMB Rengam) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டம், ரெங்கம் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.[1] ரெங்கம் நகரத்தின் மையத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளது.[2] மலேசியாவின் பழைமையான தொடருந்துகளில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையம் 1909-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM West Coast Railway Line) அமைந்துள்ள இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி சேவைகளை வழங்குகிறது. ரெங்கம் நகரத்தில் இந்த நிலையம் அமைந்துள்ளதால், ரெங்கம் நகரத்தின் பெயர் இந்த நிலையத்திற்கும் வழங்கப்பட்டது. பொது2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து பயணிகளின் செயல்பாடுகள் ரெங்கம் தற்காலிகத் தொடருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டன. புதிய ரெங்கம் நிலையத்திற்கு சில மைல் தொலைவில் ஒரு வழித்தடத்தைக் கொண்ட ஒரு நிலையம் தற்காலிகமாகக் கட்டப்பட்டு உள்ளது.[3] புதிய ரெங்கம் நிலையம் திறக்கப்பட்டதும், பழைய நிலையம் ஒரு பாரம்பரியக் கட்டிடமாக, பழைய நிலையில் அப்படியே தக்க வைக்கப்படுமா என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. புதிய ரெங்கம் நிலையத்தில் நடைபெறும் சீரமைப்பின் காரணமாக, பழைய ரெங்கம் நிலையம் பயணிகளின் பொது வசதிகளுக்காக மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. புதிய ரெங்கம் நிலையத்தில் பயணிகளுக்கான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. புதிய ரெங்கம் நிலையத்தைச் சுற்றியுள்ள பாதைகளில் செப்பனிடும் பணிகள் 2021 டிசம்பரில் தொடங்கப்பட்டன.[4] இரட்டைப் பாதை மின்மயமாக்கல் திட்டம்கிம்மாஸ் - ஜொகூர் பாரு மின்மயமாக்கப்பட்ட இரட்டை கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய ரெங்கம் நிலையம் கட்டப்படுகிறது. இந்த நிலையம் 23 ஜூன் 2021 அன்று மூடப்பட்டு, அதற்குப் பதிலாகப் பழைய ரெங்கம் நிலையத்திற்கு சில மைல் தொலைவில் ஒரு தற்காலிக நிலையம் அமைக்கப்பட்டது. புதிய கேடிஎம் இடிஎஸ் மின்சாரச் தொடருந்து சேவைகளுக்கு இடமளிக்கும் வகையில், ஜொகூர் மாநிலத்தில் உள்ள தொடருந்து வழித்தடங்களில் தற்போது மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.[5] மலாயா கடற்கரை மேற்குத் தொடருந்து வழித்தடத்தில் இரட்டைப் பாதை மற்றும் ஒற்றைப் பாதைகளை மின்மயமாக்கும் திட்டமே மலேசிய மின்மயமாக்கல் திட்டம் ஆகும்.[6] மேலும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia